கேப்டன் மில்லர் லுக்கில் நெருப்புடன் விளையாடும் தனுஷ்.. நாளை வெளியாகும் பாலிவுட் படத்தின் அறிவிப்பு!
மும்பை: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த செயல்பாடுகள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்து வருகின்றன/ ஒரு பக்கம் இயக்குநராகவும் மறுபக்கம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பாடலாசிரியராகவும் பன்முகத் திறமைகளை காட்டி வருகிறார் தனுஷ். இவை அனைத்திலும் அவர் மிகச் சிறப்பாக தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
எந்த ஒரு விஷயத்திலும் டெடிகேஷன் இருந்தால் வெற்றி சாத்தியமே என்பதை அவர் அடுத்தடுத்த விஷயங்களில் மூலம் புலப்படுத்தி வருகிறார். நடிகராக இருப்பவர்கள் இயக்குநராக ஜொலிப்பதில்லை. ஆனால் தன்னால் எதையும் செயல்படுத்துவது சாத்தியமே என்பதை அடுத்தடுத்து இந்த உலகத்திற்கு சுட்டிக்காட்டி வருகிறார் தனுஷ். அந்த வகையில் இந்த ஆண்டு துவக்கத்திலேயே அவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன. இதனிடையே பாலிவுட் படத்திலும் அவர் இணைந்து நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த வெற்றி படங்களை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக தயார்படுத்தி வருகிறார். ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக இந்த ஆண்டிலேயே குபேரா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை என மூன்று படங்கள் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படங்களில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை படங்களை தனுஷ் இயக்கி லீட் கேரக்டரில் நடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களை இயக்கி குறுகாலகட்டத்திலேயே மூன்று படங்களை தன்னுடைய இயக்கத்தில் நிறைவு செய்துள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்: தனுஷ் இயக்கத்தில் முதல் படத்திற்கும் ராயன் படத்திற்கும் இடையில் அதிகமான கேப் இருந்த நிலையில் தற்போது தன்னுடைய நேர நிர்வாகத்தை சிறப்பாக பயன்படுத்தி அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டில் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் மற்றும் ராயன் படங்கள் ரிலீசான நிலையில் இந்த ஆண்டும் மூன்று படங்கள் ரிலீசாகவுள்ளன. இந்நிலையில் சப்தமே இல்லாமல் தேரே இஷ்க் மெய்ன் பாலிவுட் படத்தில் இணைந்துள்ளார் தனுஷ். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் சூட்டிங் மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வருகின்றன.
நாளை முக்கிய அறிவிப்பு: இந்நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் நாளைய தினம் இந்த படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தில் உள்ள நிலையில் நாளைய தினம் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பாலிவுட்டில் ரஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தனுஷ், அந்த படங்களில் சாக்லேட் பாய் லுக்கில் காணப்பட்டார். இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தேரே இஷ்க் மெய்ன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் கேப்டன் மில்லர் லுக்கில் காணப்படுகிறார்.
தேரே இஷ்க் மெய்ன் படம்: மேலும் அவர் தீப்பந்தத்தை மிகவும் ஆக்ரோஷமாக கொண்டு வந்து எரிவதாக இந்த வீடியோவில் காணப்படுகிறது. மேலும் கொழுந்து விட்டு எரியும் நெருப்பை பார்த்துவிட்டு அவர் நிதானமாக திரும்பிச் செல்வதாகவும் காணப்படுகிறது. பாலிவுட்டில் முன்னதாக காதலை மையமாகக் கொண்ட கதைக்களங்களில் தனுஷ் நடித்த நிலையில் தற்போது இந்தியிலும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் இந்த ஆண்டிலேயே திட்டமிடப்படும் நிலையில் இந்த ஆண்டிலேயே தனுஷின் நான்கு படங்கள் ரிலீசாக உள்ளன. மீண்டும் மீண்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான் இவருக்கு மட்டும் நேரம் எப்படி தான் சாத்தியப்படுகிறது என்பதே அது.


Click it and Unblock the Notifications











