Actor Dhanush: தனுஷுடன் ஜோடி சேரும் கியாரா அத்வானி.. அட சூப்பர் காம்பினேஷன்தான்!
சென்னை: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறார் நடிகர் தனுஷ். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்து வரும் தனுஷ், தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் தனுஷின் இயக்கத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு ராயன் படம் அடுத்த மாதத்தில் ரிலீசாகவுள்ளது.
இவ்வாறு அடுத்தடுத்து தன்னை முன்னணி இயக்குநர்களின் படங்களில் கமிட் செய்து வரும் தனுஷ் அடுத்ததாக மேலும் இரண்டு முன்னணி இயக்குனர்களுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் முன்னதாக அறிவிக்கப்பட்ட தேரே இஷ்க் மெயின் படத்தின் நாயகி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் வெற்றிக் கூட்டணியில் தன்னை இணைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஜனவரியில் தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் வெளியானது கேப்டன் மில்லர் படம். சுதந்திரப் போராட்ட காலத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். சிவராஜ்குமார் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த சூழலில் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.
குபேரா படம்: குபேரா படத்தில் அவருடன் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன. இந்நிலையில் அடுத்ததாக தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் ராயன் படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
தேரே இஷ்க் மெயின் படம்: இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடனும் தனுஷ் கமிட்டாகி வருகிறார். இதனிடையே கடந்த ஆண்டிலேயே பாலிவுட்டில் தனுஷ் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்ட படம் தேரே இஷ்க் மெயின். இந்தப் படத்தின்மூலம் பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராயுடன் ராஞ்சனா, அட்ராங்கி ரே படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷ் கைக்கோர்த்துள்ளார். இந்தப் படத்தின் பிரமோ வீடியோவும் கடந்த ஆண்டிலேயே வெளியானது. இந்தக் கூட்டணியில் வெளியான முதல் படம் ராஞ்சனா வெளியாகி 10 ஆண்டுகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனுஷுடன் ஜோடி சேரும் கியாரா அத்வானி: இதனிடையே தேரே இஷ்க் மெயின் படத்தின் சூட்டிங் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் முதல்கட்ட சூட்டிங் வாரணாசியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காதலை மையமாக கொண்டு AIR Force பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக கியாரா அத்வானி இணையவுள்ளதாகவும் இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை விரைவில் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











