பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் பகத் ஃபாசில்.. அட இவர்தான் டைரக்டரா?

சென்னை: நடிகர் பகத் பாசில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் என அடுத்தடுத்த படங்களின்மூலம் கவனம் பெற்ற பகத் பாசில் தொடர்ந்து புஷ்பா படம் மூலம் தெலுங்கிலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கிலேயே மற்றொரு படத்திலும் நடித்து வரும் பகத் ஃபாசில் மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட்டிலும் முன்னணி இயக்குநர் ஒருவருடன் பகத் ஃபாசில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

fahadh faasil bollywood

நடிகர் பகத் ஃபாசில்: நடிகர் பகத் ஃபாசில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவரது இயல்பான நடிப்பால் தமிழிலும் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளார். வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் என அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வரவேற்பை பெற்றவர் பகத். அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். முன்னதாக தெலுங்கிலும் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களையும் கட்டிப் போட்டார். இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி பகத் ஃபாசிலின் ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்துள்ளது.

பாலிவுட்டில் பகத் ஃபாசில் என்ட்ரி: தற்போது புஷ்பா 2 உள்ளிட்ட இரண்டு தெலுங்குப் படங்களிலும் மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் பகத் ஃபாசில். இந்நிலையில் அடுத்ததாக பகத் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் பிரபல இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில்தான் பாலிவுட்டில் பகத் ஃபாசில் களமிறங்கவுள்ளார். கடந்த சில மாதங்களாகவே இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது இந்தக் கூட்டணி உறுதியாகியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளது. ராக்ஸ்டார், ஹைவே, தமாசா ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளவர் இம்தியாஸ் அலி.

பகத் ஃபாசில் -இம்தியாஸ் அலி கூட்டணி: பாலிவுட்டில் தன்னுடைய வித்தியாசமான ஸ்கிரீன் பிளே மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் இம்தியாஸ் அலியின் இயக்கத்தில் இறுதியாக அமர் சிங் சமிகா படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. மேலும் இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டிவரும் இம்தியாஸ் அலி, அனுராக் காஷ்யப் இயக்கத்தில் பிளாக் ஃபிரைடே படத்திலும் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். இதனிடையே இம்தியாஸ் அலி மற்றும் பகத் ஃபாசில் கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகத் ஃபாசில் உற்சாகம்: பகத் ஃபாசில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வெற்றிகளை தொடர்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகத் நடிப்பில் வெளியான ஆவேசம் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மாஸ் ஹிட் கொடுத்தது. பாலிவுட்டின் சிறப்பான இயக்குநர்களில் ஒருவரான இம்தியாஸ் அலியுடன் தற்போது பகத் ஃபாசில் இணையவுள்ளது பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய பாலிவுட் என்ட்ரி படத்திலேயே இம்தியாஸ் அலி போன்ற ஒரு இயக்குநருடன் பணிபுரிவது தனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளதாக பகத் ஃபாசிலும் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X