மும்பையில் இர்ஃபான் கானின் உடல் அடக்கம்.. லாக்டவுனால் 20 பேர் மட்டுமே பங்கேற்பு.. ரசிகர்கள் கதறல்!

மும்பை: அகால மரணமடைந்த நடிகர் இர்பான் கானின் உடல் மும்பை வெர்சோவா அடக்கஸ்தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Recommended Video

Shocking: Actor Irfaan Khan Passed Away | Slum Dog Millionaire | Life of Pi

பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகரான இர்ஃபான் கான் நேற்று திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். உடனடியாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இர்ஃபான் கான் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். பெருங்குடல் தொற்று காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த இர்ஃபான் கான் இன்று காலை திடீரென மரணமடைந்தார். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு செய்தியை கேட்டு இந்திய சினிமா நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ அறிக்கை

அதிகாரப்பூர்வ அறிக்கை

இர்ஃபான் கான் இறந்த செய்தியை அவரது டீமை சேர்ந்தவர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டனர். 2018ஆம் ஆண்டு இர்ஃபானுக்கு ஏற்பட்ட அரிதான புற்றுநோய் கட்டியை கண்டுபிடித்ததை, அவர் தெரியப்படுத்திய போது பயன்படுத்திய வார்த்தைகளை கூறி அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.

இரண்டு மகன்கள்

இரண்டு மகன்கள்

ஊரடங்கு உத்தரவால் அவரது முகத்தை கூட இறுதியாக பார்க்க முடியாத அவரது ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மறைந்த இர்பான் கானுக்கு சுபதா கான் என்ற மனைவியும், பபில் கான், அயன் கான் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

ரசிகர்கள் கதறல்

ரசிகர்கள் கதறல்

ஊரடங்கு அமலில் உள்ள போதும் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். மிக்கா சிங், கபில் ஷர்மா, விஷால் பரத்வாஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏராளமான ரசிர்கள் அவரது வீட்டின் முன்பும் கல்லறைக்கும் முன்பும் நின்று கதறி அழுதனர்.

இர்ஃபான் உடல் அடக்கம்

இர்ஃபான் உடல் அடக்கம்

இர்பான் கானின் இறுதிச்சடங்குகள் இன்றே நடத்தி முடிக்கப்பட்டன. பிற்பகல் 3 மணியளவில் அதிகளவு போலீஸ் பாதுகாப்புடன் இர்ஃபான் கானின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள அடக்கஸ்தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஊரடங்கு காரணம் 20 பேர் மட்டுமே அவரது இறுதிச்சடங்கில் அனுமதிக்கப்பட்டனர். பங்கேற்ற அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X