twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாலிவுட்டில் தடம் பதித்த இர்ஃபான் கான்.. எத்தனை படங்கள்.. என்னென்ன படங்கள்.. ஒரு ரவுண்ட் அப்!

    |

    சென்னை: இந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டு சென்றிருக்கும் இர்ஃபான் கான் பல ஹாலிவுட் படங்களில் நடித்து உலக சினிமாவிலும் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

    Recommended Video

    Shocking: Actor Irfaan Khan Passed Away | Slum Dog Millionaire | Life of Pi

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை பூர்விகமாக கொண்டவர் இர்பான் கான். 1985-ம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

    தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார் இர்ஃபான் கான்.

    கொடுமையான செய்தி.. இர்ஃபான் கான் மரணத்தால் அதிர்ச்சியில் உறைந்த பிரபலங்கள்.. கலங்கும் இந்திய சினிமா!கொடுமையான செய்தி.. இர்ஃபான் கான் மரணத்தால் அதிர்ச்சியில் உறைந்த பிரபலங்கள்.. கலங்கும் இந்திய சினிமா!

    சிவப்புக் கம்பள வரவேற்பு

    சிவப்புக் கம்பள வரவேற்பு

    50க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ள இர்ஃபான் கான் பான் சிங் தோமர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். பாலிவுட்டில் இர்ஃபானின் திறமையைக் கண்டு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தது ஹாலிவுட். ஹாலிவுட் மற்றும் இங்கிலாந்த் படங்களில் நடித்தார் இர்பான் கான்.

    தி வாரியர் படம்

    தி வாரியர் படம்

    அமெரிக்கா, இங்கிலாந்த் என வெளிநாட்டு படங்களில் நடிக்க தொடங்கிய இர்ஃபான் கான் முதலில் பிரிட்டிஷ் படமான தி வாரியர் என்ற படத்தில் 2001ஆம் ஆண்டு நடித்தார். அதனை தொடர்ந்தி தி நேம் சேக் என்ற ஆங்கில படத்தில் நடித்தார் இர்ஃபான் கான்.

    பஸ்ல் கடைசி ஹாலிவுட்

    பஸ்ல் கடைசி ஹாலிவுட்

    அதனை தொடர்ந்து தி அமேஸிங் ஸ்பைடர் மேன், ஜூராஸிக் வோர்ல்ட் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இர்பான், ஸ்லம்டாக் மில்லினியர், ஏ மைட்டி ஹார்ட், இன்ஃபெர்னோ, லைஃப் ஆஃப் பை போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். பஸ்ல் என்ற ஹாலிவுட் படத்தில் கடைசியாக நடித்தார் இர்ஃபான் கான்.

    ஆஸ்கர், கோல்டன் குளோப்

    ஆஸ்கர், கோல்டன் குளோப்

    அவர் நடித்த பெரும்பாலான அமெரிக்க மற்றும் இங்கிலாந்த் படங்கள் முக்கிய அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. இர்ஃபான் நடிப்பில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர், லைஃப் ஆஃப் பை ஆகிய படங்கள் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை அள்ளின.

    கொள்ளை கொண்ட காலன்

    கொள்ளை கொண்ட காலன்

    லைஃப் ஆஃப் பை படத்தில் தன்னுடைய ரிச்சர்ட் பார்க்கருடன் தனது கடல் பயண பிளாஷ்பேக்கை உணர்ச்சி பொங்க, அனுபவித்து கூறியிருப்பார் இர்ஃபான் கான். இன்னும் சாதிக்க வேண்டியவரை பெருங்குடல் தொற்றால் அதற்குள் கொள்ளை கொண்டுவிட்டான் காலன்.

    ஈடுசெய்ய முடியாத இழப்பு

    ஈடுசெய்ய முடியாத இழப்பு

    ஹாலிவுட்டில் குறைந்த படங்களில் நடித்திருந்த போதும் தனக்கான இடத்தை தனித்துவமான நடிப்பால் தக்க வைத்துக்கொண்டார். சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படும் இர்ஃபான் கானின் திடீர் மரணம் இந்திய சினிமா மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சினிமாவுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை மறுக்க முடியாது.

    English summary
    Actor Irfan khan demise is not only the loss for indian cinema its a huge loss for America and England cinema. Irfan khan has acted in many hollywood movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X