பிரபல நடிகர் இர்ஃபான் கான் திடீர் மரணம்: சிகிச்சை பலனின்றி உயிர்பிரிந்தது.. ரசிகர்கள் அதிர்ச்சி
மும்மை: பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகரான இர்ஃபான் கான் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 53.
Recommended Video
பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகரான இர்ஃபான் கான் நேற்று திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். உடனடியாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இர்ஃபான் கான் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். பெருங்குடல் தொற்று காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

புற்றுநோய் பாதிப்பு
தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இர்ஃபான் கான் இருப்பதாக கூறப்பட்டது. ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் இர்ஃபான் கான். இதற்காக 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்றுவந்தார்.

இர்ஃபான் கான் மரணம்
இந்நிலையில் இர்ஃபான் கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இர்ஃபான் கான் உயிரிழந்த தகவலை பிரபல பாலிவுட் இயக்குநர் ஷுஜித் சிர்கார் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அவரது டிவிட்டில் என்னுயிர் நண்பா, நீ பெரிதும் போராடினாய், நான் உன்னை நினைத்து எப்போதும் பெருமை படுவேன்.

இர்ஃபான் கான் சல்யூட்
நாம் மீண்டும் சந்திப்போம். சுதபா மற்றும் பபில் ஆகியோருக்கு எனது அனுதாபங்கள். சுதபா நீயும் ரொம்பவே போராடினாய். நோய்க்கு எதிரான இந்த போராட்டத்தில் நீங்களும் எல்லாவற்றையும் கொடுத்தீர்கள். அமைதி மற்றும் ஓம் ஷாந்தி.. இர்ஃபான் கான் சல்யூட்.. என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பெரும் அதிர்ச்சி
இர்ஃபான் கான் மரண செய்தியை கேட்டு திரைதுறையினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த வாரம் சனிக்கிழமைதான் இர்ஃபான் கானின் தாயார் சயீதா பேகம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காலமானார்.

ஒரு வாரம் ஆவதற்குள்
லாக்டவுன் காரணமாக தாயின் இறுதிச்சடங்கிளில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனால் வீடியோ காலின் மூலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தனது தாயின் இறுதிச் சடங்கைப் பார்த்து கதறி அழுதார் இர்ஃபான் கான். தயார் இருந்த ஒரு வாரம் ஆவதற்குள் மகனான இர்ஃபான் கான் மரணமடைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











