உடல்நலக் குறைவு.. ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மும்பையில் உள்ள கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
நடிகர் இர்ஃபான் கான் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு நியூரோ எண்டோக்ரைன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் கான் லண்டனில் உயர்தர சிகிச்சைகளை மேற்கொண்டு கடந்த ஆண்டு மீண்டும் நடிக்க வந்தார்.
கடந்த சனிக்கிழமை பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் தாயார் சாயிதா பேகம், 95, ஜெய்ப்பூரில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டுள்ளதால், ஜெய்பூருக்கு செல்ல முடியாத நிலையில், வீடியோ காலில் அழுத படி தாயின் இறுதி சடங்குகளை இர்ஃபான் கான் கண்டார்.
இந்நிலையில், திடீரென இர்ஃபான் கான் உடல்நலத்தில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதால், தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு லாக்டவுனுக்கு முன்னதாக நடிகர் இர்ஃபான் கான் நடிப்பில் ஆங்கிரேஸி மீடியம் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











