திரையரங்குகளை தாக்க வரும் ஜான் ஆப்ரஹாம்மின் 'அட்டாக்'... எப்போன்னு பாருங்க!

மும்பை: ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள அட்டாக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோலிவுட் முதல் பாலிவுட் வரை திரைப்படங்கள் திரையரங்குகளில் சொல்லிக் கொள்ளும்படி ரிலீஸ் ஆகவில்லை.

சொல்லப் போனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் திரையரங்குகள் திறந்திருந்த நாட்கள் சொற்ப மாதங்களே இருக்கும்.

திரையரங்குகள் திறப்பு

திரையரங்குகள் திறப்பு

இதனால் பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டன. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தியேட்டரில் ரிலீஸ்

தியேட்டரில் ரிலீஸ்

இருப்பினும் தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவு காரணமாக இன்னமும் பல படங்கள் ஓடிடி தளங்களிலேயே ரிலீஸ் செய்யப்படுகின்றன. அதேநேரத்தில் சில படங்கள் திரையரங்குகளிலும் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

ஜான் ஆப்ரஹாம்மின் அட்டாக்

ஜான் ஆப்ரஹாம்மின் அட்டாக்

அந்த வகையில் அண்மையில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரின் பெல் பாட்டம் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் எதிர்பார்த்தப்படி வசூலையும் குவித்தது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம்மின் அட்டாக் படமும் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படுகிறது. ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26ஆம் தேதி

ஜனவரி 26ஆம் தேதி

அதன்படி குடியரசு தினமான வரும் ஜனவரி 26ஆம் தேதி அட்டாக் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். உண்மை நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட ஒரு அதிரடி த்ரில்லரான அட்டாக் திரைப்படத்தை லக்ஷ்ய ராஜ் ஆனந்த் இயக்கியுள்ளார்.

ஜான் ஆப்ரஹாம் அறிவிப்பு

ஜான் ஆப்ரஹாம் அறிவிப்பு

மேலும் இந்த படத்தை ஜெயின்லால் கடாவின் பென் ஸ்டுடியோஸ், ஜான் ஆபிரகாம் மற்றும் அஜய் கபூர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை நடிகர் ஜான் ஆப்ரஹாம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X