twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்‘ பாலிவுட் பயப்படுகிறதா?.. 'பின் டிராப் சைலன்ஸ்' ஏன்? .. விளாசிய கங்கன ரனாவத்!

    |

    மும்பை: விவேக் அக்னிஹோத்ரியின் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தைப் பார்த்து பாலிவுட் மௌனமாக இருப்பது ஏன் என, நடிகை கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பி உள்ளார்.

    "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இதில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் மற்றும் பாஷா சும்ப்ளி ஆகியோர் நடித்துள்ளனர்.

    நெல்சனிடம் பீஸ்ட் அப்டேட் கேட்ட விக்ரம் டைரக்டர்... அப்டேட் சொல்வாரா நெல்சன்! நெல்சனிடம் பீஸ்ட் அப்டேட் கேட்ட விக்ரம் டைரக்டர்... அப்டேட் சொல்வாரா நெல்சன்!

    தி காஷ்மீர் ஃபைல்ஸ்

    தி காஷ்மீர் ஃபைல்ஸ்

    விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' அனைத்து முரண்பாடுகளையும் மீறி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் குறைந்த ப்ரோமோஷன் மற்றும் மார்க்கெட்டிங் மற்றும் பல சர்ச்சைகள் இருந்தபோதிலும், காஷ்மீர், மும்பை, டெல்லி, மற்றும் கிழக்கு பஞ்சாப் ஆகிய இடங்களிலிருந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிக் குவித்துள்ளது.

    விரைவில் 100 கோடியை எட்டும்

    விரைவில் 100 கோடியை எட்டும்

    "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 5 நாட்களாகி உள்ளது. முதல் நாள் வசூல் ரூ 3.55 கோடியை வசூலித்தது. 3ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.15.10 கோடி வசூல் செய்தது. இருப்பினும், 4 ஆம் நாளில், படம் ஒரு பெரிய வசூலை வாரிக் குவித்துள்ளது. தற்போது 45.15 கோடியாக உள்ளது. இப்படம் விரைவில் 100 கோடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மனதை உலுக்கும்

    மனதை உலுக்கும்

    80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீரி பண்டிதர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறியதே இப்படத்தின் கதையாகும். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் சோகம் கரைபுரண்டு ஓடுகிறது. அழகு கொஞ்சும் காஷ்மீரின் கண்ணீர் கதையை மனதை உலுக்கும் வகையில் விவேக் அக்னிஹோத்ரி இயக்கி உள்ளார்.

    பாராட்டிய கங்கனா ரனாவத்

    பாராட்டிய கங்கனா ரனாவத்

    இந்நிலையில், பாலிவுட் பிரபல நடிகை கங்கனா ரனாவத் இத்திரைப்படத்தை வெகுவாக பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இதில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்த்து பயந்து பாலிவுட்'பின் டிராப் சைலன்ஸ்' இருப்பதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார். விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பல கட்டுக்கதைகளை உடைத்துள்ளது. வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் விமர்சகர்களிடமிருந்து அமோகமான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வலுவான தொடக்கத்தைப் பெற்றுள்ளது என்று பாராட்டினார்.

    கண்ணீரில் மூழ்கடிக்கிறது

    கண்ணீரில் மூழ்கடிக்கிறது

    காஷ்மீர் பள்ளத்தாக்கிகலிருந்து வெளியேரும் புஷ்கருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது? குடும்பத்தை பலி கொடுத்த கிருஷ்ணா தனது குடும்பத்தின் படுகொலை பற்றிய உண்மையைக் கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார். கிருஷ்ணாவின் பயணம் மற்றும் அவரது குடும்பத்திற்கு என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையைக் கண்டறியும் கதை. தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பல காட்சிகளில் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. இந்த திரைப்படத்தை தமிழ் மொழியில் விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    Actor Kangana Ranaut criticising the film industry for not talking about The Kashmir Files.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X