Animal movie: 10 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா.. லியோ, ஜெயிலர் படங்களை பின்னுக்குத் தள்ளிய அனிமல்!

சென்னை: ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா அனில் கபூர் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது அனிமல் படம்.

அர்ஜூன் ரெட்டி என்ற மிரட்டலான படத்தை கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

Actor Ranbir kapoors Animal movi collects more than 700 crores in just 10 days

கலவையான விமர்சனங்களை படம் பெற்ற போதிலும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்து அதிகமான வசூலையும் குவித்து வருகிறது.

அனிமல் படம்: நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்டவர்களை லீட் கேரக்டர்களில் கொண்டு கடந்த டிசம்பர் 1ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசானது அனிமல் படம். அர்ஜூன் ரெட்டி என்ற அதிரடி படத்தை இயக்கியிருந்த சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்திருந்த நிலையில் பப்லு பிரித்விராஜூம் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

வசூலை குவிக்கும் அனிமல்: மிரட்டலான கதைக்களம் மற்றும் காட்சிகளுடன் வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தின் கலெக்ஷன் மிரட்டலாக அமைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் 700 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை வெளியான இந்திய படங்களில் அதிகமான வசூலை குவித்த முதல் இரண்டு படங்களாக ஷாருக்கானின் ஜவான் மற்றும் பதான் படங்கள் உள்ளன.


ஜெயிலர், லியோவை பின்னுக்குத்தள்ளிய அனிமல்: இந்த இரு படங்களும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை எட்டி அதிக வசூல் குவித்த இந்த ஆண்டில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள நிலையில் அடுத்தடுத்த இடங்களில் ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ படங்கள் இருந்தன. இதில் ஜெயிலர் படம் 650 கோடி ரூபாய்களையும் லியோ படம் 620 கோடி ரூபாய்களை வசூலித்திருந்தன. இந்நிலையில் தற்போது அனிமல் படம் 10 நாட்களிலேயே இந்த இரு படங்களையும் பின்னுக்கு தள்ளியுள்ளது.

3வது இடத்தில் அனிமல்: தற்போது ஜவான், பதான் படங்களை தொடர்ந்து இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் 3வது இடத்திற்கு அனிமல் படம் முன்னேறியுள்ளது. அடுத்ததாக இந்தப் படம் இன்னும் சில தினங்களில் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வசூலில் முன்னேறினாலும் ஷாருக்கான் படங்களின் வசூலை முறியடிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரசிகர்களை கவர்ந்த ரன்பீர்: பாலிவுட்டில் அதிகமான ரொமாண்டிக் ஜானர்களிலேயே நடித்துவந்த ரன்பீர் கபூர், அனிமல் படம் மூலம் முதல்முறையாக கேங்ஸ்டராக நடித்த நிலையில், அவரது இந்த மாறுபட்ட நடிப்பு பாலிவுட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதற்கு அனிமல் படத்தின் வசூல் உதாரணமாக அமைந்துள்ளது. அதிகப்படியான வன்முறை மற்றும் பழிவாங்குதலை கதைக்களமாக கொண்டு வெளியாகியுள்ளது அனிமல் படம். இதே ஜானர்களிலே லியோ மற்றும் ஜெயிலர் படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X