Salman khan: உயிருக்கு அச்சுறுத்தல்.. குண்டு துளைக்காத புதிய காரை வாங்கிய சல்மான்.. விலை இவ்வளவா?
மும்பை: நடிகர் சல்மான் கான் பல ஆண்டுகளாக பாலிவுட்டில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். 58 வயதான நிலையிலும் இவரையும் இவரது மார்க்கெட்டையும் பாலிவுட்டில் அசைக்க முடியவில்லை. தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சல்மான் கான்.
திரைப்படங்களில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சியிலும் தான் கிங்குதான் என்பதை தொடர்ந்து 18 ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார். இவரது ஹோஸ்ட்டிங்கில் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சி தொடர்ந்து 18 ஆண்டுகளாக வெற்றிநடை போட்டுவருகிறது. இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்து வருகிறார் சல்மான் கான்.

நடிகர் சல்மான் கான்: பாலிவுட்டில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வெற்றிநடை போட்டு வருபவர் நடிகர் சல்மான் கான். 58 வயதான நிலையிலும் இவரது ஸ்டைலில் தற்போதும் இளம் ரசிகைகள் மயங்கிப்போய் உள்ளனர். வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் தான் எப்போதும் கிங்குதான் என்பதை தொடர்ந்து 18 ஆண்டுகளாக பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சிமூலம் நிரூபித்து வருகிறார் சல்மான் கான். இந்த நிகழ்ச்சி தற்போது 18வது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. இதில் முதல் முறையாக தென்னிந்தியாவின் பிரபலமாக நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் பங்கேற்றுள்ளது இந்த நிகழ்ச்சியை மேலும் பரபரப்பாக்கி வருகிறது.
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்: இதைவிட மிகப்பெரிய பரபரப்பை கடந்த சில தினங்களாக சந்தித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை, தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொடூரமாக சுட்டுக் கொன்ற நிலையில், அவரது நண்பரான நடிகர் சல்மான் கான் அடுத்ததாக குறி வைக்கப்பட்டுள்ளார். 5 கோடி ரூபாய் கொடுத்து பிஷ்னோய் இடையிலான பகையை சல்மான்கான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் இல்லையென்றால் பாபா சித்திக்கைவிட சல்மான் கானின் முடிவு மோசமாக இருக்கும் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை போக்குவரத்து துறைக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.
குண்டு துளைக்காத காரை வாங்கிய சல்மான்: இதையடுத்து சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு 60 பாடிகார்ட்கள் சூழ அவர் பிக்பாஸ் 18 நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்திருந்தார். இந்நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் தற்போது குண்டு துளைக்காத நிசான் பேட்ரோல் எஸ்யூவி ரக காரை 2 கோடி ரூபாயில் சல்மான் கான் வாங்கியுள்ளார். இந்த கார் துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரில் வெடிகுண்டு எச்சரிக்கை அலாரம், குண்டு துளைக்காத பக்கவாட்டு காண்ணாடிகள், ஓட்டுநரை பாதுகாக்கும் திரை மறைப்புகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
சல்மானுக்கு பாதுகாப்பு தீவிரம்: இந்த காரில்தான் தற்போது வெளியில் சல்மான் கான் சென்றுவருகிறார். மேலும் அவரது படத்தின் படப்பிடிப்பு மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் போலீசார் பலத்த பாதுகாப்பை கொடுத்து வருகின்றனர். முன்னதாக சல்மான் கான் வீட்டினருகில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த சுக்பீர் பல்வீர் சிங் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சல்மான் கானை சுட்டுக் கொல்வதற்காக 25 லட்சம் ரூபாய் வரையில் பேரம் பேசப்பட்டதாகவும் தகவ்லகள் வெளியாகின. இதையடுத்தே சல்மான் கானுக்கு பாதுகாப்பை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











