சல்மான் கானின் புதிய பாடல் .. "பாய் பாய்’’..ரசிகர்கள் வரவேற்பு !

மும்பை : சல்மான் கான் புதிதான ஒரு பாடலை தானே எழுதியும், தானே பாடியும் உள்ளார். இந்த பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், புதியதாக ஒரு சானிடைசரை லான்ச் செய்துள்ளார்.

அதில் இப்போது நாம் இருக்கும் சூழலில் மக்களுக்கு மிகவும் தேவையான தயாரிப்புகளை தயாரித்து வரும் FRSH என்ற பிரபல பிராண்டின் முதல் தயாரிப்பினை அவர் இப்போது வெளியிட்டுள்ளார். அவர் அந்த தயாரிப்பை தனது இன்ஸ்டாகிராம் மூலம் மக்களுக்கு அறிமுகம் செய்தும் அதை பயன்படுத்தியும் காட்டியுள்ளார்.

ஒரு பக்கம் தோட்டம் , கிராமிய வாழ்க்கை என்று ஜாலியாக இருந்தாலும் , இன்னொரு பக்கம் சமூக அக்கறை கொண்டு பல நல்ல விஷங்கள் செய்து வருகிறார் சல்மான் பாய்.பல லட்சம் ரசிகர்கள் சல்மான் செய்யும் பல அப்டேட்ஸ் பார்த்து பாலோவும் செய்கின்றனர்.

 சல்மான் பாய்

சல்மான் பாய்

இந்தி சினிமா துறையில் கொடிகட்டி பறந்து வருபவர் பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கான் இவரை அவரது ரசிகர்கள் செல்லமாக சல்மான் பாய் என்றழைப்பார்கள். இவருக்கு உலகம் முழுவதும் பல லட்சகணக்கான ரசிகர்களும், ரசிகைகளும் இருந்து வருகின்றனர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், பாடகராகவும் இருந்து வருகிறார். தனது ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என தெரிந்து வைத்து அவர்களுக்கு ஏற்றார் போல் படங்களை கொடுப்பதில் இவர் வல்லவர். மேலும் இவர் பாலிவுடில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி கொண்டு வருகிறார் .

 ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

சல்மான் கான் நடிகராக மட்டுமல்லாமல் சொந்தமாக SKBH என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்து படங்களையும் தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே. மேலும் இவர் பாடகராகவும் பல படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் கேட்டு இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.

 சால்மான் எழுதிய பாடல்

சால்மான் எழுதிய பாடல்

இவர் இப்போது "பாய் பாய்" என்ற பாடலை எழுதியும், அதை பாடியும் உள்ளார். இந்த பாடலை நேற்று தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்போது இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பாட்டு பாடுவது அனைவரும் செய்யும் ஒன்று தான் , ஆனால் அதை பிரமாண்ட ப்படுத்த தகுந்த நேரத்தில் விளம்பரம் செய்ய , மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் யுக்திகள் சல்மானுக்கு நன்கு தெரியும்.

 உதவும் எண்ணம்

உதவும் எண்ணம்

இந்த லாக்டவுன் சமயத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டு வரும் நிலையில். நடிகர்கள் அனைவரும் தங்களால் முயன்ற அளவு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தங்களது சொந்த செலவில் வினியோகித்து வருகின்றனர். அதிலும் உதவி என்று வந்து விட்டால் சல்மான் கான் முதல் ஆளாக அங்கு நிற்பார். இந்த நிலையில் சல்மான் கான் தனது குழுவினருடன் மக்களுக்கு இந்த இக்கட்டான சூழலில் உதவி கொண்டும் வருகிறார்.

 சல்மான் கான் வெளியிட்டார்

சல்மான் கான் வெளியிட்டார்

இப்போது இந்தியா இருக்கும் சூழலில் அழகு சாதன பொருட்களை விட பாதுகாப்பு பொருட்கள் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதனால் மக்களின் தேவையை புரிந்து கொண்ட சில நிறுவனங்கள் இப்போது covid 19-ஐ சமாளிக்க மிகவும் தேவையான ஒன்றாக கருதப்படும் சானிடைஸர்களின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போவதை அறிந்த சில நிறுவனங்கள் சானிடைஸர்களை அறிமுகபடுத்தி உள்ளது. இதை பாலிவுட் மெகாஸ்டார் சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் வெளியிட்டும் அதனை பயன்படுத்தியும் காட்டினார். பின் சானிடைஸரின் தேவைகளையும் அதன் பயன்பாட்டை பற்றியும் மக்களுக்கு தெளிவாக விளக்கினார்.

 வேகமாக பரவும் பாடல்

வேகமாக பரவும் பாடல்

சல்மான் சாங் என்று வந்து விட்டால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்த லாக் டவுன் சமயத்தில் நிறைய ரசிகர்கள் போனும் கையுமாக இருக்கிறார்கள். எப்ப பார்த்தாலும் இணையதளத்தில் இணைந்து உள்ளார்கள் . ஆகையால் சல்மான் சாங் அதிகம் பகிர படுகிறது. சரியான நேரம் பார்த்து பாட்டு பாடிய சல்லு பாய் இன்னும் நிறைய பாடி சூப்பர் சிங்கராக மாறுவார் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X