கைது செய்யப்பட்ட ஆரியன் கான்.. ஷாருக்கான் வீட்டிற்கு நள்ளிரவில் திடீர் விசிட் அடித்த சல்மான் கான்!

மும்பை: போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நடிகர் சல்மான் கான் ஷாருக்கானின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் கிங் கான் என அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக் கான். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில் போதை பொருள் வழக்கில் ஷாருக்கானின் மூத்த மகனான 23 வயது ஆரியன் கான் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பாலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண பயணிகள் போல்

சாதாரண பயணிகள் போல்

மும்பையில் இருந்து கோவாவிற்கு சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இக்கப்பலில் போதை பார்ட்டி நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் தலைமையில் அதிகாரிகள் அந்த சொகுசு கப்பலில் சாதாரண பயணிகள் போன்று டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர்.

கப்பலில் அதிரடி ரெய்டு

கப்பலில் அதிரடி ரெய்டு

கப்பல் மும்பையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் பார்ட்டி ஆரம்பமானது. பார்ட்டியில் கஞ்சா, கோகைன் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் 13 பேரை பிடித்தனர்.

20 மணி நேர சோதனை

20 மணி நேர சோதனை

இதில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கானும் அடங்குவார். பிடிபட்ட அனைவரிடமும் 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், ஷாருக்கான் மகன் ஆரியன் கானை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆரியன் கான் உள்பட 3 பேரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர்.

வழக்கறிஞருடன் சந்திப்பு

வழக்கறிஞருடன் சந்திப்பு

ஆரியன் கானின் கைது உறுதி செய்யப்படுவதற்கு முன்பாகவே ஷாருக்கான் தனது வீட்டை விட்டு வெளியேறி தனது வழக்கறிஞர் அலுவலகத்திற்கு சென்றார். ஆரியனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை வாங்குவது, வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்துவது ஆகியவை அடங்கும் என்று போதை பொருள் தடுப்பு பிரிவான என்சிபி தெரிவித்துள்ளது. ஆரியன் கான் தற்போது என்சிபியின் காவலில் உள்ளார்.

போர்டிங் பாஸ் கூட இல்லை

போர்டிங் பாஸ் கூட இல்லை

ஆர்யனின் வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே ஜாமீன் கோரிய மனுவில் ஆரியன் கான் சாட்டிங் மெஸேஜ்ஜின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். மேலும் கப்பலில் ஆர்யனுக்கு டிக்கெட் இல்லை, அறை அல்லது இருக்கை இல்லை என்றும் அவர் அழைக்கப்பட்டதால் அவர் அங்கு இருந்தார் என்றும் வழக்கறிஞர் மனேஷிண்டே கூறியுள்ளார். அவரிடம் போர்டிங் பாஸ் கூட இல்லை. அவர் மீது எந்த ஆதாரமும் இல்லை. சாட்டிங் மெஸேஜ் அடிப்படையில் மட்டுமே அவர் கைது செய்யப்பட்டார், என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

நள்ளிரவில் சென்ற சல்மான் கான்

நள்ளிரவில் சென்ற சல்மான் கான்

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, நடிகர் சல்மான் கான் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஷாருக்கானின் மும்பை வீட்டிற்குச் சென்றார். சல்மான் கான் வெள்ளை நிற எஸ்யூவி காரின் பின்புற இருக்கையில் ஷாரூக்கான் வீட்டின் பெயரான 'மன்னத்' வீட்டிற்குள் சென்றார். இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X