Tiger 3 movie: அதிரும் டைகர் தீபாவளி.. மிரட்டும் சல்மான் கானின் டைகர் 3 பட ட்ரெயிலர்!
மும்பை: நடிகர் சல்மான் கான், கத்ரினா கையிப், இம்ரான் ஹாஸ்மி, ரேவதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டைகர் 3 படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்சில் ஒன்றாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் டைகர் 3 பட ட்ரெயிலர் ரிலீஸ்: நடிகர் சல்மான் கானின் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியானது ஏக் தா டைகர். இந்தப் படத்தின் மூன்றாவது பாகமாக தற்போது டைகர் 3 படம் உருவாகியுள்ளது. வரும் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சல்மான் கானுடன் கத்ரினா கையிப், இம்ரான் ஹாஸ்மி, ரேவதி உள்ளிட்டவக்ள் லீட் கேரக்டர்களில் நடித்துள்னர். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்சில் ஒன்றாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே யூனிவர்சிலிருந்து வெளியான ஷாருக்கானின் பதான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருந்தது. இந்தப் படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருந்தார். தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் டைகர் 3 படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.
மனைவி கத்ரினா கையிப் மற்றும் மகனுடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்துவரும் சல்மானிடம் நாட்டை காக்கும் பொறுப்பு வழங்கப்படும் நிலையில் அவரால் தன்னுடைய குடும்பத்தை இழந்த இம்ரான் ஹாஸ்மி, அவரை பழிவாங்குவதாக கதைக்களம் அமைந்துள்ளது. நாட்டை காப்பது அல்லது குடும்பத்தை காப்பது என சல்மானுக்கு இம்ரான் சாய்ஸ் கொடுக்கும் நிலையில், இரண்டையும் எப்படி சல்மான் மீட்டெடுக்கிறார் என்பதை இந்தப் படம் கூறுகிறது.

மிரட்டலான இந்த ட்ரெயிலர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகியுள்ள நிலையில் சமூக வலைதளப்பக்கத்தில் இந்த மிரட்டலான ட்ரெயிலரை வெளியிட்டுள்ளார் சல்மான் கான். படத்தின் அதிகமான ஆக்ஷன் காட்சிகளை பார்க்க முடிகிறது. நடிகை ரேவதியும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதனிடையே கத்ரினா கையிப்பும் அம்மாவாகவும் மனைவியாகவும் மற்றும் ஆக்ஷன் காட்சிகளிலும் மாஸ் காட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீசையொட்டி இந்த தீபாவளி அதிரடி தீபாவளியாக அமையப் போவதாகவும் சல்மான் கான் குறிப்பிடுவதாக காட்சிகள் அமைந்துள்ளன. ஆக்ஷன், காதல் காட்சிகள், சென்டிமெண்ட், கிராபிக்ஸ் என ட்ரெயிலர் சிறப்பாக அமைந்துள்ளது. போன் மூலம் யாரிடமோ சல்மான் கான் உதவி கேட்பதாக காட்சி அமைப்புகள் காணப்படுகின்றன. அதனால் அது பதான் ஷாருக்காக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. படம் சர்வதேச அளவில் தீபாவளி ட்ரீட்டாக நவம்பர் 12ம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











