போதை பொருள் வழக்கு.. போலீஸ் கஸ்டடியில் மகன்.. பிரபல நடிகருடனான படப்பிடிப்பை ரத்து செய்த ஷாருக்கான்!
மும்பை: போதை பொருள் வழக்கில் மகன் கைது செய்யப்பட்டுள்ளதால் நடிகர் ஷாருக்கான் தனது படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார்.
அக்டோபர் 2ஆம் தேதியான கடந்த சனிக்கிழமை மும்பையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பலில் போதை பார்ட்டி நடப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கப்பலில் சாதாரண பயணிகளை போன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் அதிகாரிகள். இதில் கப்பலில் போதை பார்ட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டது.

20 மணி நேரம் விசாரணை
இதனை தொடர்ந்து, போதை பார்ட்டியில் ஈடுபட்ட பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட பலரை பிடித்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடம் 20 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவரை கைது செய்தனர்.

போலீஸ் கஸ்டடியில் மகன்
மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த ஷாருக்கான் வெளிநாட்டு படப்பிடிப்பில் இருந்து உடனடியாக நாடு திரும்பினார். மேலும் தனது வழக்கறிஞர் மூலமாக மகனின் ஜாமீனுக்கும் ஏற்பாடு செய்தார். ஆனால் ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் ஆர்யனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது.
Recommended Video

ஷாருக்கானுக்கு ஆறுதல்
அதோடு இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து சோதனை நடத்தி வரும் போலீசார் பார்ட்டி ஏற்பாட்டாளர்கள், பார்ட்டியில் பங்கேற்றவர்கள் என பலரையும் கைது செய்து வருகின்றனர். மகன் கைது செய்யப்பட்டுள்ளதால் வருத்தத்தில் உள்ள ஷாருக்கானுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

விளம்பர படம்
இந்நிலையில் மகன் கைதானதால் தனது படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார் நடிகர் ஷாருக் கான். அதாவது நடிகர் ஷாருக் கான், அஜய் தேவ்கனுடன் நேற்று விளம்பர படம் ஒன்றில் நடிப்பதாக இருந்தது. ஷாருக்கானுக்காக சுமார் 20 முதல் 25 பவுன்சர்கள் செட்களில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

ரத்து செய்த ஷாருக்கான்
மேலும் அவரது வேனிட்டி வேனும் காலை முதல் ஸ்டுடியோவில் இருந்தது. ஆனால் மாலை 3-4 மணியளவில் சூப்பர் ஸ்டார் நடிகரான ஷாருக்கான் தனது படப்பிடிப்பை நிறுத்தினார். அவர் அஜய் தேவ்கனுடன் நடிக்க இருந்தார். ஆனால் தனது தனிப்பட்ட பிரச்சனைக்காக படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார் ஷாருக்கான்.

இன்று ஜாமீன் கிடைக்குமா?
இதனிடையே ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பாலிவுட் வட்டாரத்தில் எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications











