டாம் குரூஸையே ஓரம்கட்டிய ஷாருக்கான் பிறந்தநாள் இன்று.. சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?
சென்னை: நடிகர் ஷாருக்கான் பாலிவுட் பாட்ஷாவாக அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார். இடையில் சில ஆண்டுகள் சொந்த பிரச்சினைகள் காரணமாக அவர் படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டில் மட்டுமே அடுத்தடுத்து மூன்று படங்களை அவர் ஹாட்ரிக் வெற்றியாக கொடுத்திருந்தார்.
தற்போது அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வரும் ஷாருக்கான், இன்றைய தினம் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி வருகிறது. தன்னுடைய படங்களை தன்னுடைய சொந்த பேனரிலும் தயாரித்து வரும் ஷாருக்கான், அதன் மூலம் மிகப் பெரிய அளவில் லாபத்தை ஈட்டி வருகிறார். இதையடுத்து அவரது சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர் ஷாருக்கான்: பாலிவுட் பாட்ஷாவாக தொடர்ந்து சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். 60 வயதை நெருங்கிய நிலையிலும் இவரது மாஸ் மற்றும் லுக் ரசிகர்களின் இடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. சொந்தப் பிரச்சனைகள் காரணமாக இடையில் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஷாருக்கான், கடந்த ஆண்டில் மட்டுமே மூன்று படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்தார். இதில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த ஜவான் படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்திருந்தது. முன்னதாக வெளியான பதான் படமும் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்தது.
ஷாருக்கான் பிறந்தநாள்: தற்போது அடுத்தடுத்து படங்களில் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் ஷாருக்கான். இந்நிலையில் இன்றைய தினம் அவர் தனது 59வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரரான ஷாருக்கான் ஏராளமான சொத்துகளுக்கும் சொந்தக்காரராக உள்ளார். சர்வதேச பணக்காரர்களில் முதலிடங்களில் உள்ள ஷாருக்கானின் சொத்து மதிப்பு 7310 கோடிகளாக உள்ளது. ஹாலிவுட்டின் முன்னணி ஹீரோவான டாம் குரூசின் சொத்து மதிப்பை காட்டிலும் ஷாருக்கானுடையது அதிகம். டாம் குரூசின் சொத்து மதிப்பு 6,722 கோடிகளாக உள்ளது.
திரையில் மாயாஜாலங்கள்: தற்போது அடுத்தடுத்து தன்னுடைய சொந்த பேனர்களில் படங்களை தயாரித்து வருகிறார் ஷாருக்கான். கடந்த ஆண்டில் வெளியான பதான், ஜவான் படங்களை ஷாருக்கான் தயாரித்திருந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு மேலும் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். கிங் கான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷாருக்கான். நடிகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி ஆங்கர் என பல்வேறு முகங்களுடன் செயல்பட்டு வரும் இவர், 60 வயதை நெருங்கிய நிலையிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகிறார். தொடர்ந்து திரையில் மாயாஜாலங்களை நிகழ்த்தி வருகிறார்.
பாலிவுட் பாட்ஷா: இவரது நடிப்பில் தேவதாஸ், குச் குச் ஹோதா ஹை, தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே போன்ற பல படங்கள் வெற்றிப்படங்களாக மாஸ் காட்டியவை. 14 பிலிம்பேர் விருதுகளை குவித்துள்ள ஷாருக்கான், இன்னும் அதிக தூரம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது மகன் மற்றும் மகள் இருவரும் வளர்ந்த நிலையிலும் சினிமாவில் தொடர்ந்து சாதித்து வருகிறார். அவரது பிறந்தநாளையொட்டி நேரிலும் சமூக வலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அவற்றை கொண்டாட்டத்துடன் ஏற்று வருகிறார் பாலிவுட் பாட்ஷா.


Click it and Unblock the Notifications











