Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
மும்பை: நடிகர் ஷாருக்கான் -இயக்குநர் அட்லீ கூட்டணியில் கடந்த ஆண்டில் வெளியானது ஜவான் படம். இந்தப் படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 1000 கோடி கிளப்பில் இணைந்தது. படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்திருந்தது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த சூழலில் அனைத்து பாடல்களும் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.
படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில், ரசிகர்களை குறிப்பாக வடஇந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படம் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் ஷாருக்கிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஷாருக்கான் -அட்லீ கூட்டணி இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக்கான்: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, பிரியா மணி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியானது ஜவான் படம். இந்தப் படம் மூலம் இயக்குநர் அட்லீ மட்டுமில்லாமல் நயன்தாராவும் பாலிவுட்டில் தங்களது என்ட்ரியை கொடுத்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 1000 கோடி கிளப்பில் இணைந்தது. சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை குறிப்பாக வட இந்திய ரசிகர்களை இந்தப் படம் வெகுவாக கவர்ந்தது. படம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் ஷாருக்கானிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது. ஷாருக்கான் -நயன்தாரா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் படத்தில் பேசப்பட்டது.
ஜவான் படம்: இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். அவரது இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. குறிப்பாக ஜிந்தா பந்தா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலில் சுமார் 1000 பெண் நடனக் கலைஞர்களுடன் இணைந்து ஷாருக்கான் நடித்திருந்தார். இந்தப் பாடல் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக லிரிக் வீடியோ பாடலாக வெளியாகி லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்றது. சமூக வலைதளங்களில் மிகவும் அதிகமாக இந்தப் பாடலுக்கு முன்னணி திரைப்பிரபலங்களும் நடனமாடி வீடியோவை பகிர்ந்ததை பார்க்க முடிந்தது.
ஷாருக்கான் பாடலுக்கு மோகன்லால் ஆட்டம்: இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பாடலுக்கு பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடனமாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவர் ஸ்டேஜில் ஆடிய இந்த நடன வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷாருக்கான், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் மோகன்லால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்திருந்தார்.தொடர்ந்து இந்தப் பாடல் தற்போது தனக்கு மிகவும் ஸ்பெஷலாக மாறியுள்ளதாகவும் அதற்கு மோகன்லாலுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது ஆட்டத்தில் தான் பாதியளவிற்காவது ஆடியிருப்பதாக தான் கருதுவதாகவும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

மோகன்லாலை பாராட்டிய ஷாருக்கான்: மேலும் மோகன்லாலுடன் இணைந்து இரவு உணவு சாப்பிடும் ஆசையையும் வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மோகன்லால், ஷாருக்கானின் நடன அசைவுகளை யாராலும் அதேபோல செய்ய முடியாது என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் ஷாருக்கானின் இந்த பாராட்டிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். இரவு விருந்து மட்டும் ஏன், காலை உணவையும் சேர்த்து இருவரும் இணைந்து சாப்பிடலாம் என்றும் கூறியுள்ளார். இவர்களின் இந்த உரையாடல்கள், ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











