Shah rukh khan: கதையால் ரசிகர்களை கவர்ந்த டங்கி படம்.. எவ்வளவு கலெக்ஷன்ஸ் தெரியுமா?
சென்னை: நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகி ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளன. இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பதான் மற்றும் செப்டம்பரில் வெளியான ஜவான் படங்கள் அடுத்தடுத்து 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளன. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஷாருக்கான், டாப்சி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது டங்கி படம். த்ரி இடியட்ஸ், பிகே, முன்னாபாய் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள ராஜ்குமார் ஹிரானி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின்மூலம் முதல் முறையாக ஷாருக்கான் -ராஜ்குமார் ஹிரானி கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படம் ஷாருக்கானின் படமாக இல்லாமல் ராஜ்குமார் ஹிரானியின் படமாக இருக்கும் என்று முன்னதாக கூறப்பட்டது. படத்திற்கு அதிகமான பிரமோஷன்களும் செய்யப்படாத நிலையில், படம் தற்போது ரசிகர்களை அதிகமாக கவர்ந்து மாஸ் காட்டியுள்ளது. தற்போது படத்தில் வசூல் குறித்தும் படத்தை தயாரித்துள்ள ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளிப்படுத்தி வருகிறது.

நடிகர் ஷாருக்கான்: தன்னுடைய சொந்த பிரச்சினைகள் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்த நடிகர் ஷாருக்கானுக்கு இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாகவே அமைந்துள்ளது. அடுத்தடுத்து 3 படங்கள் வெளியாகி இந்த ஆண்டை அவருக்கு சிறப்பாக்கியுள்ளது. மூன்று படங்களில் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ள நிலையில் பதான், ஜவான் படங்கள் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. அவருக்கு தயாரிப்பாளராகவும் இந்த ஆண்டு ஏற்றத்தையே கொடுத்துள்ளத. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள டங்கி படமும் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி: நண்பர்களின் வாழ்க்கையை, வெளிநாட்டில் வேலை செய்யும் அவர்களது கனவை மையமாக கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ராஜ்குமார் ஹிரானி. இந்தப் படம் ராஜ்குமார் ஹிரானியின் படமாகவே அமையும் என்று முன்னதாக விளம்பரப்படுத்தப்பட்டது. இந்தப் படத்தின்மூலம் முதல் முறையாக இணைந்த ஷாருக்கான் -ராஜ்குமார் ஹிரானி காம்பினேஷன் ரசிகர்களுக்கு சிறப்பான படத்தையே கொடுத்துள்ளது. ஷாருக்கின் முந்தைய படங்களை போல இல்லாமல் டங்கி படம் இந்தியில் மட்டுமே வெளியானது. மேலும் 5 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்குமார் இயக்கத்தில் இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட்: கடந்த 21ம் தேதி இந்தப் படம் ரிலீசான நிலையில், படத்தின் அடுத்தடுத்த வசூல் நிலவரங்களை ஷாருக்கின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தின் வசூல் குறித்து அடுத்தடுத்த பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதற்கு நன்றி என்றும் தற்போது தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் கலெக்ஷன் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. இதுவரை படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 157.22 கோடி ரூபாய்களை கலெக்ட் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
சமூக பிரச்சினையை சொல்லும் படம்: இந்தப் படத்தில் சமூகத்தின் முக்கியமான பிரச்சினையை கையில் எடுத்துள்ளார் ராஜ்குமார். என்றபோதிலும் தனக்கேயுரிய ஸ்டைலில் அந்தக் கதையை மென்மையான நகைச்சுவையுடன் கொடுத்துள்ளார். வட மாநிலங்களில் கழுதை விமானம் என்ற பயணத்தின்மூலம் பிற நாடுகளில் மக்கள் சட்டவிரோதமாக குடியேறுவதை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளது. இந்தப் படத்தில் 4 இளைஞர்கள் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைவதை கதைக்களமாக கொண்டுள்ளார். அவர்களின் பயணத்தில் இணையும் ராணுவ வீரர் கேரக்டரில் ஷாருக்கான் கவனம் ஈர்க்கிறார். மொத்தத்தில் ஷாருக்கானின் டங்கி ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











