Actor Shah rukh khan: அதிரடி காட்டும் ஷாருக்கானின் டங்கி படம்.. வசூல் எவ்வளவு பாக்கலாங்களா?
சென்னை: ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டில் மூன்றாவது படமாக டங்கி வெளியாகியுள்ளது. முன்னதாக பதான், ஜவான் படங்கள் வெளியாகி மாஸ் காட்டியுள்ளன.
இந்நிலையில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் தற்போது டங்கி படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது-
இந்தப் படம் முதல் நாளிலேயே சர்வதேச அளவில் 70 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ஷாருக்கான்: நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் இந்த ஆண்டிலேயே பதான், ஜவான் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 1000 கோடி ரூபாய்களுக்கும் மேல் கலெக்ஷனை பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் இந்த ஆண்டிலேயே மூன்றாவது படமாக டங்கி வெளியாகியுள்ளது. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் சர்வதேச அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முதல் நாளிலேயே 58 கோடி ரூபாய்களுக்கும் மேல் கலெக்ஷனை ஈட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டங்கி படம்: வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் டாப்ஸி, விக்கி கௌஷல் போன்றவர்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்துடன் பிரபாஸ் -பிரஷாந்த் நீல் கூட்டணியில் உருவாகியுள்ள சலார் படமும் வெளியாகியுள்ள நிலையில், இரு படங்களுக்கும் இடையில் சிறப்பான போட்டி காணப்படுகிறது. இந்நிலையில் ஷாருக்கானின் இந்தப்படமும் வெற்றி பெற்று அவருக்கு 2023ம் ஆண்டில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படமும் அவரது முந்தைய படங்களை போலவே 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் வசூல்: அதிரடி சண்டை காட்சிகள் போன்றவை இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது டங்கி. இந்தப் படம் முதல் நாளிலேயே இந்திய அளவில் 29.2 கோடி ரூபாய் வசூலையும் சர்வதேச அளவில் 58 கோடி ரூபாய் கலெக்ஷனையும் எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கௌரி கான் அறிவித்துள்ளார். கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் படத்திற்கு அதிகமான வரவேற்பு காணப்படுகிறது. கேரளாவில் முதல் நாளில் மட்டுமே 58 லட்சம் ரூபாய் கலெக்ஷனை இந்தப் படம் எட்டியுள்ளது. மற்ற மாநிலங்களிலும் படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. படத்திற்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மனதிற்கு நெருக்கமான படம்: காதல், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது டங்கி படம். வெளிநாட்டிற்கு செல்ல விசா கிடைக்காத சூழலில் நண்பர்கள் இணைந்து சட்டவிரோதமாக எல்லையை தாண்டி செய்யும் பயணத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது டங்கி படம். இந்தப் படத்திற்காக வழக்கம்போல அதிகமான பிரமோஷன்களை நடிகர் ஷாருக்கான் மேற்கொண்ட நிலையில், இந்தப் படம் தன்னுடைய மனதிற்கு நெருக்கமான படம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்தப் படத்தை ஜியோ ஸ்டூடியோசுடன் இணைந்து ஷாருக்கான் தயாரித்துள்ளார்.
அதிரடி காட்டும் ஷாருக்கான்: கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக்கானின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தன்னுடைய சொந்த பிரச்சினைகள் காரணமாக அவர் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தாத நிலையில் இந்த ஆண்டிலேயே அவரது நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் ரிலீசாகியுள்ளன. இதில் முதல் 2 படங்கள் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ள நிலையில் டங்கி படமும் எந்த வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளிலேயே இந்தப் படத்தின் வசூல் அதிகமாக உள்ள நிலையில் படத்தை ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











