Shah rukh khan: பதான் கூட்டணியில் மீண்டும் ஷாருக்கான்.. டிசம்பரில் துவங்கும் பதான் 2 சூட்டிங்!
மும்பை: நடிகர் ஷாருக்கானின் அடுத்தடுத்த 3 படங்கள் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. 4 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் நடிக்காமல் இருந்த ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியானது பதான் படம். இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். ஜான் ஆப்ரஹாம் வில்லன் கேரக்டரில் அசத்தியிருந்தார். படத்தில் சல்மான் கானும் சிறப்பான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் 1000 கோடி கிளப்பில் இணைந்து அசத்தியது.
இந்தப் படம் லாஜிக்கை பல இடங்களில் மீறியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இருந்தபோதிலும் 4 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக வெளியான நிலையில், தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. படத்தின் வசனங்கள், பாடல் வரிகள் உள்ளிட்டவை ரசிகர்களை உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட வைத்தது. விஷால் சேகர் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன. படத்தில் தன்னுடைய ஆக்ஷன் காட்சிகள் மூலம் தீபிகா படுகோன் அசத்தியிருந்தார்.

நடிகர் ஷாருக்கான்: நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஆண்டில் பதான், ஜவான் மற்றும் டன்கி என அடுததடுத்தது மூன்று படங்கள் வெளியாகி மாஸ் காட்டின. தொடர்ந்து 4 ஆண்டுகள் தன்னுடைய சொந்த பிரச்சினைகளால் நடிக்காமல் இருந்த ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஆண்டில் 3 படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தின. கடந்த ஜனவரியிலேயே ஷாருக்கானின் பதான் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. தொடர்ந்து செப்டம்பரில் வெளியான ஜவானும் 1000 கோடி கிளப்பில் இணைந்தது. டன்கியும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது.
பதான் படம்: பதான் படம் ஆக்ஷன் என்டர்டெயின்மெண்ட் ஜானரில் உருவாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. படத்தில் ரா உளவாளி பதானாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் ஷாருக்கான. வழக்கமான கதைதான் என்றாலும் படத்தில் ராணுவ, உளவு அதிகாரிகளின் சாகசங்கள் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து இயக்குநர் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருந்தார். படத்தில் தீபிகா படுகோனுக்கு காதல் மட்டுமில்லாமல் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பாக கைக்கொடுத்திருந்தன. படத்தில் பாகிஸ்தான் உளவாளியாக நடித்திருந்த ஜான் ஆப்ரஹாமும் சிறப்பான கவனத்தை பெற்றிருந்தார்.
ஆதித்ய சோப்ராவுடன் மீண்டும் கூட்டணி: யாஷ்ராஜ் நிறுவனத் தயாரிப்பில் இந்தப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளை தயாரிப்பு தரப்பு தற்போது துவங்கியுள்ளது. யாஷ் ராஜ் பிலிம்சின் ஸ்பை யூனிவர்சின் 8வது படமாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பரில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் ஷாருக்கான் மற்றும் ஆதித்ய சோப்ரா மீண்டும் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் கடந்த ஆண்டிலேயே இயக்குநர் சித்தார்த் ஆனந்த் நிறைவு செய்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்பை திரில்லர் படம்: ஸ்பை திரில்லராக உருவாகவுள்ள இந்தப் படத்தில் மீண்டும் சல்மான் கான் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கடந்த மாதத்தில் வெளியான ஃபைட்டர் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் மீண்டும் ஷாருக்கானின் பதான் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பதான் படம் 1000 கோடி கிளப்பில் இணைந்த நிலையில், பதான் 2 படமும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சூட்டிங்கை துவங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











