காதலிப்பது உண்மைதான்… பாலிவுட் நடிகர் பளீச்… யார் அந்த காதலி !
மும்பை : பெரும்பால நடிகை, நடிகைகள் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக பேசாத நிலையில் பாலிவுட் நடிகர் சித்தாந்த் சதுர்வேதி, தான் காதலிப்பதாகவும், காதலி மீது மிகுந்த அன்பு வைத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சித்தாந்த் சதுர்வேதி கல்லி பாய் இந்தி திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர்.
ஆஸ்கர் பட்டியல் வரை எட்டிய கல்லி பாய் திரைப்படத்தில், தனது நடிப்பால் சித்தாந்த் பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

கெஹ்ரையான்
பாலிவுட் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வரும் நடிகை தீபிகா படுகோனியுடன் இணைந்து கெஹ்ரையான் திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் சித்தாந்த் சதுர்வேதி. விவகாரமான இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் பிப்ரவரி 11 ந் தேதி வெளியாகி பல விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஏகப்பட்ட முத்த காட்சிகள
திருமணம் ஆனா தீபிகா, தனது தங்கைக்கு நிச்சயம் செய்யப்பட்ட சித்தாந்த் சதுர்வேதியை காதலிக்கிறார். முக்கோண காதல் கதையை கொண்ட இப்படத்தில் ஏகப்பட்ட லிப் லாக் காட்சிகள், படுக்கை அறை காட்சிகள் என தீபிகாவும் சித்தாந்த் சதுர்வேதியும் படு நெருக்கமாக இணைந்து நடித்திருப்பார்கள். இதில், இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டினார்கள்.

காதலிக்கிறேன்
கெஹ்ரையான், திரைப்படத்திற்கு பிறகு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் சித்தாந்த சதுர்வேதி, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசினார். அதில், தான் காதலிப்பதாகவும், காதலி மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதாகவும் கூறினார். நான் கூச்ச சுபாவம் கொண்டவன் என்பதால், அந்த காதலி யார் என்பதை பொது இடத்தில் வெளிப்படுத்த விரும்பவில்லை என்றார்.

இவர் தான் அந்த காதலியா?
தனது தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட முறையில் வைத்திருப்பதையே நான் விரும்புகிறார். காதலியை, உலகிற்கு அறிமுகப்படுத்த விரும்பாத சித்தாந்த், எனது நடிப்பை பற்றியே மக்கள் பேச வேண்டும் என விரும்புவதாக கூறினார். அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தாவை சித்தாந்த் காதலிப்பதாக தகவல்கள் பாலிவுட்டில் வெளிவந்தன. ஒருவேளை சித்தாந்த் இவரைத்தான் காதலிக்கிறாரா? என தகவல்கள் பரவி வருகின்றன.
Recommended Video

பல படங்களில்
நடிகர் சித்தாந்த் அடுத்ததாக ஃபோன் பூட் படத்தில் கத்ரீனா கைஃப் மற்றும் இஷான் கட்டர் ஆகியோருடன் இணைந்து நடிக்க உள்ளார். அதே போல மாஸ்டர் படப்புகழ் மாளவிகா மோகனனுடன் யுத்ரா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











