எனது அறக்கட்டளையின் ஒவ்வொரு ரூபாயும்… உயிரைக்காக்க உதவுகிறது… சோனு சூட் அறிக்கை !
மும்பை : பாலிவுட் நடிகரான சோனு சூட் மிரட்டும் வில்லனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் மிகவும் பிரபலமானது என்னவோ கொரோனாவுக்கு பிறகுதான்.
Recommended Video
கொரோனா காலத்தில் ஒடி ஓடி இவர் செய்த உதவியால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
கடந்த 15ந் தேதி, சோனு சூட்டின் 6 அலுவலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். வருமானவரித்துறையின் சோதனையை அடுத்து, சோனு சூட் முதன்முறையாக அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்.

பாலிவுட் பிரபலம்
பிரபல பாலிவுட் நடிகராக இருந்து வருபவர் சோனு சூட். இவர், தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியதால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, ஓடிவந்து உதவினார் சோனு சூட்.

6 இடங்களில் சோதனை
இந்நிலையில், மும்பை மற்றும் லக்னோவில், நடிகர் சோனு சூட் உடன் தொடர்புடைய 6க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 15 ஆம் தேதி அதிரடியாக சோதனை நடத்தினர். ரியல் எஸ்டேட் தொழில் ஆவணங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

20 கோடி வரி ஏய்ப்பு
வருமான வரித் துறை வெளியிட்ட அறிக்கையில், மும்பையைச் சேர்ந்த பிரபல நடிகருக்கு சொந்தமான மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டில்லி, குருகிராமில் உள்ள இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில், அவர் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இதுவரை 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

சோனு சூட் அறிக்கை
வருமான வரித்துறையின் சோதனையை அடுத்து நடிகர் சோனு சூட்டின் சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், ஒவ்வொரு இந்தியனின் ஆதரவும் நல்வாழ்த்துகளும் தனக்கு இருப்பதாக இந்தி பாடலை மேற்கோள்காட்டி பதிவிட்டுள்ளார். மேலும், சோனு சூட் தனது அறக்கட்டளையின் ஒவ்வொரு ரூபாயும் தேவைப்படுபவர்களுக்கும் அல்லது உயிரைக் காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார். மேலும் அவர் தனது ஒப்புதல் கட்டணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குமாறு வலியுறுத்தினார். கடந்த 4 நாட்களாக, விருந்தினர்கள் வருகை தந்ததால், சில நாட்களாக மக்களுக்கு உதவ முடியவில்லை என்றும், இனிமேல் தேவைப்படுபவர்களுக்கு உதவ முடியும் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications











