உடல்நலக்குறைவு.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல நடிகர் திடீர் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்!

By

மும்பை: உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் காலமானதை அடுத்து திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக திரைத்துறையில் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாகவும் உடல் நலப்பிரச்னை காரணமாகவும் இறந்து வருகின்றனர்.

விஷால் ஆனந்த்

விஷால் ஆனந்த்

இந்நிலையில், பிரபல இந்தி பட நடிகர் விஷால் ஆனந்த் நேற்று மரணமடைந்துள்ளார். இவர், 70-களில் வெளியான சுமார் 11 படங்களில் நடித்துள்ளார். சேதன் ஆனந்த் இயக்கத்தில் இந்தியா -பாகிஸ்தான் போரை மையப்படுத்தி உருவான இந்துஸ்தான் கி கசம் (1973), ச ரி க ம ப, டாக்ஸி டிரைவர், சல்தே சல்தே, தில் சே மிலே தில், கிஸ்மத் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தயாரித்தும் இயக்கியும்

தயாரித்தும் இயக்கியும்

சில படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அதற்காகச் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிஷம் கோலி என்ற தனது பெயரை சினிமாவுக்காக, விஷால் ஆனந்த் என்று மாற்றிக் கொண்டவர் இவர்.

பப்பிலஹிரி

பப்பிலஹிரி

பிரபல இசை அமைப்பாளர் பப்பிலஹிரிக்கு பெரிய பிரேக் கொடுத்தது இவருடைய, சல்தே சல்தே படப் பாடல்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஷால் ஆனந்தின் மறைவை அடுத்து, இந்தி திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் நடித்தப் படங்களை குறிப்பிட்டும் அதில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இர்பான் கான்

இர்பான் கான்

இந்த கொரோனா காலத்தில், இந்தி நடிகர்கள் இர்பான் கான், ரிஷி கபூர், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத், மலையாள பட இயக்குனர் சச்சி, இயக்குனர் நிஷிகாந்த் காமத், தமிழில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்பட பலரை சினிமா துறை இழந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X