பாலிவுட்டில் படவாய்ப்பு குறைய இதுதான் காரணம்… மனம் திறந்த பூமிகா !
சென்னை : தமிழ் ரசிகர்களால் குடும்பப்பாங்கான நடிகைகள் என பெரிதும் போற்றப்பட்ட பல நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை பூமிகா..
விஜய், சூர்யா, மகேஷ் பாபு உள்ளிட்ட உச்ச ஹீரோக்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்த இவர் இப்பொழுது பிற கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வலைத்தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பூமிகா, பாலிவுட்டில் படவாய்ப்புகள் குறைந்ததற்கான காரணத்தை மனம் திறந்த பேசி உள்ளார்.

முக்கியமான கேரக்டர்
நடிகை பூமிகா தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இன்று வரை நினைவுக்கு வருவது "சில்லுனு ஒரு காதல்" திரைப்படத்தில் வரும் இவரது ஐஷூ கதாபாத்திரம். அதில் அந்த அளவுக்கு நேசுரலாக நடித்திருப்பார்.

விஜய்யுடன் இணைந்து
இப்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் விஜய்யுடன் இணைந்து பத்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பூமிகா அதைத்தொடர்ந்து ரோஜாக்கூட்டம் என்ற மற்றுமொரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தார்.

கில்லி ஒரிஜினல்
தமிழை விட தெலுங்கில் மிக பிஸியாக நடித்து வந்த இவர் விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கில்லி திரைப்படத்தின் ஒரிஜினல் பதிப்பான ஒக்கடு-வில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிப்பில் வேற லெவல் மேஜிக் செய்திருப்பார்.

ரீ என்ட்ரி
ரோஜா கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் நீண்ட இடைவெளியை எடுத்துக்கொண்ட பூமிகா தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வர சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். சூர்யா ஜோதிகா பூமிகா உள்ளிட்டோரின் மாறுபட்ட நடிப்பில் உருவான சில்லுனு ஒரு காதல் திரைப்படம் 15 ஆண்டுகளை கடந்த பின்னும் இன்றளவும் காதலர்களால் கொண்டாடப்படும் மிகச் சிறந்த திரைப்படமாக இருந்து வருகிறது.

பாலிவுட்டில் படவாய்ப்பு இல்லை
இந்தியில், சல்மான் கானுடன் 'தேரே நாம்' என்ற படத்தில் அறிமுகமான பூமிகா,பாலிவுட்டில் தனக்கு வாய்ப்புகள் குறைந்தது குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். பாலிவுட்டில் படவாய்ப்புகள் வந்த போது நான் பிஸியாக இருந்ததால் என்னால் நடிக்க முடியவில்லை. மேலும், நல்ல கதைகள் என்னைத் தேடி வந்தன. ஆனால், நான் எதிர்பார்த்த விஷயங்கள் அதில் இல்லை, சில எனக்கு பொருந்தவில்லை. இதனால் பாலிவுட்டில் இடைவெளி அதிகரித்து பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக வருத்தத்துடன் கூறியுள்ளார்.

3 படங்கள் கைவசம்
பூமிகாவுக்கு பாலிவுட் படவாய்ப்புகள் இல்லை என்றாலும், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக 'பாகல்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், சீடிமார் என்ற தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும், இந்தியில் ஆபரேஷன் மஜ்னு என்ற படத்திலும், தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











