3வது திருமண சர்ச்சை… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை!
மும்பை: தங்கல் திரைப்படத்தில் தனது மகளாக நடித்த பாத்திமா சனா சேக்கை, அமீர்கான் 3வதாக திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பல இடங்களில் சுற்றித்திரிந்ததாகவும், இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இணையத்தில் பரவிவரும் திருமண வதந்திக்கு பாத்திமா சனா கேக் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அறிமுகம்
நடிகர்,இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர் நடிகர் அமீர்கான். இவர் 1978 Yaadon Ki Baaraat என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை அடுத்து, பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஹிட் படங்களில்
Raakh,Dil, Rangeela, Raja Hindustani, ishq என பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படங்களில் நடித்து திறமையான நடிகர் என பெயர் எடுத்தார். Raja Hindustani திரைப்படத்தில் கரீஷ்மா கபூருடன் ஜோடி போட்டு நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற 'பர்தேசி பர்தேசி' என்ற பாடல் ஹிட்டடித்து பட்டி தொட்டி எங்கும் ஒளித்தது.

7 தேசிய விருது
2001ம் ஆண்டு விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியானத் திரைப்படம் லகான். இத்திரைப்படத்தில், ஒரு அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அமீர்கான். இத்திரைப்படம் 7 தேசிய விருதுகளையும், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

சிறப்பான நடிப்பு
அதே போல அமீர் கான் நடிப்பில் வெளிவந்த PK திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றுத்தந்தது. இந்த திரைப்படத்தில், வேற்றுகிரக மனிதனாக நடித்து அசத்தி இருப்பார் அமீர் கான். இப்படத்தில் அனுஷ்கா ஷர்மா ஒரு முக்கியமான ரோலில் நடித்திருப்பதார்.

ரீனா தத்தா
பல திறமைகளைக் கொண்ட முன்னணி நடிகரான அமீர்கானுக்கு இரண்டு மனைவிகள். 1986ம் ஆண்டு முதல் மனைவி ரீனா தத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இரண்டாவது திருமணம்
இதையடுத்து, 2005ம் ஆண்டு லகான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கிரண் ராவ்வை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகனும் இருக்கிறார். சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துள்ளதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர்.

விரைவில் திருமணம்
தங்கல் திரைப்படத்தில் அமீர்கானின் மகளாக நடித்த பாத்திமா சனா சேக்கை காதலிப்பதாகவும், இருவரும் பல இடங்களில சுற்றித் திரிவதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினையால் தான் அமீர்கானின் மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பாத்திமா சனா சேக்கை அமீர் கான் 3வது விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

வெறும் வதந்தி
இந்நிலையில், பாத்திமா தனது நெருங்கிய நண்பர்களிடம், ஊடகங்கள் அமீர்கான் நான் திருமணம் செய்து கொள்வதாக பரவி வரும் செய்தி உண்மையா பொய்யா என்பது பற்றி ஆராயாமல் எழுதுகின்றனர். இதனால் ரசிகர்கள் என்னைத் தவறானவராக நினைக்கின்றனர். மக்கள் என்னைத் தவறாகக் கருதுவதை நான் விரும்பவில்லை என சொல்லி புலம்பியுள்ளாராம். இதனால் இந்த கல்யாண வதந்திகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறிவருகிறாராம்.


Click it and Unblock the Notifications











