அந்தரங்க பாகத்தை தாக்கினார்.. தயாரிப்பாளரால் வாழ்க்கையே போச்சு.. கதறிய நடிகை!
மும்பை : பாலிவுட் நடிகை புளோரா சைனி, தயாரிப்பாளர் தனது அந்தரங்க பாகத்தில் தாக்கினார் என்று குற்றம்சாட்டி உள்ளார்.
மாடல் அழகியான புளோரா சைனி, இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு பெங்காலி படங்களில் நடித்துள்ளார்.
பிரேம கோசம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர், 50க்கும் படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

நடிகை புளோரா சைனி
நடிகை புளோரா சைனி தமிழில் கஜேந்திரா, குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க போன்ற ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா, சித்தாந்த், சுதீப், சிவராஜ்குமார், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், ஜெகபதி பாபு, ராஜசேகர் போன்ற டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

என்னை மிரட்டினார்
பாலிவுட் நடிகையான புளோரா சைனி 2018ம் ஆண்டு கவுரங் தோஷி மீது மீடூ குற்றச்சாட்டுகளை கூறி தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அப்போது, தயாரிப்பாளருடன் தவறான உறவில் இருந்தது குறித்தும் குடும்ப வன்முறையை எதிர் கொண்டது குறித்து மனம் திறந்த பேசி உள்ளார். தயாரிப்பாளர் மீது MeToo புகார் அளித்ததால், அவர் தன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக ஊடகத்தின் முன் தைரியமாக முறையிட்டார்.

கொடுமைப்படுத்தினார்
இந்நிலையில், நடிகை புளோரா சைனி தயாரிப்பாளர் கவுரங் தோஷி குறித்த பல அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதில், என்னுடைய இருபதாவது வயதில் சினிமாவில் நடிக்க வந்தேன். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளேன். நான் தயாரிப்பாளர் கவுரங் தோஷியை காதலித்தேன், அவருடன் உறவில் இருந்தேன். ஆரம்பத்தில் அன்பாக என்னோடு பழகி அவர் நாட்கள் செல்ல செல்ல என் கொடுமைப்படுத்தத் தொடங்கினார்.

அந்தரங்க பாகத்தை தாக்கினார்
யாரையும் பார்க்கக்கூடாது, யாரிடம் பேசக்கூடாது என்று என்னை அடித்தார். என் அந்தரங்க பாகத்தை அடித்து காயப்படுத்தினார். ஒரு நாள் காலையில் இருந்து மாலை வரை என் வயிற்றில் அடித்தார். எனக்கு வரும் அழைப்புகளை எடுத்து புளோரா இனி நடிக்க மாட்டார் என்று கூறிவிட்டார். 14 மாதங்களாக நான் அவரின் காட்டுப்பாட்டில் இருந்தேன். அவர் செய்யும் கொடுமையை நாங்க முடியாமல், நான் அம்மா வீட்டுக்கு ஓடிவந்துவிட்டேன். நான் குணமடைய பல மாதங்கள் ஆனது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது, நடிப்புதான். இப்போது மீண்டும் நடிப்பில் என் கவனத்தை திருப்பி இருக்கிறேன். இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











