9 வருஷம் ஆயிருச்சு... நடிகை இலியானா பகிர்ந்த பர்ஃபி படத்தின் போட்டோஸ்!
மும்பை: நடிகை இலியானா பர்ஃபி படத்தின் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து 9 ஆண்டுகளை கொண்டாடி வருகிறார்.
நடிகை இலியானா 2006ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தெலுங்கில் தேவதாசு, போக்கிரி படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

விஜய்யுடன் நண்பன் படம்
அதே ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நடித்தத்தன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தெலுங்கில் அதிக வெற்றி படங்களை கொடுத்துள்ள இலியானா , இந்தியிலும் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார்.

பாலிவுட்டில் பர்ஃபி படம்
பாலிவுட்டில் பர்ஃபி படத்தின் மூலம் அறிமுகமானார் இலியானா. தொடர்ந்து ஷாகித் கபூர், கோவிந்தா, அக்ஷய் குமார் என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் நடித்து வருகிறார் இலியானா. இந்தி படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இலியானா தற்போது அன்ஃபேர் அண்ட் லவ்லி என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர்
இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இலியான அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். நடிகை இலியானா ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஆண்ட்ருவை காதலித்தார். இருவரும் நீண்ட நாட்களாக காதல் ஜோடிகளாக வலம் வந்தனர்.

மன அழுத்தத்திற்கு ஆளான இலியானா
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு திடீரென இருவரும் பிரேக்கப் செய்வதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து இலியானா தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்த ஆண்ட்ருவின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார். இது பெரும் பரபரப்பானது. காதல் முறிவை தொடர்ந்து மன அழுத்தத்திற்கு ஆளான அதற்கான சிகிச்சையை மேற்கொண்டார்.

பர்ஃபி 9 ஆண்டுகள்..
தொடர்ந்து தனது கிளாமர் போட்டோக்கள் மற்றும் பிகினி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தான் பாலிவுட்டில் அறிமுகமான பர்ஃபி படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆனதை கொண்டாடியுள்ளார் நடிகை இலியானா. இதுதொடர்பாக பர்ஃபி பட போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள இலியானா, என்றென்றும் சிறப்பு என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

அனுராக் பாசு இயக்கம்
பர்ஃபி திரைப்படம் அனுராக் பாசு இயக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தை ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் சித்தார்த் ராய் கபூர் தயாரித்தனர். இந்த படம் 1970ஆம் ஆண்டில் நடந்ததாக உருவாக்கப்பட்டிருந்தது. இது டார்ஜிலிங்கைச் சேர்ந்த காது கேளாத, மாற்றுத்திறனாளி பையனான மர்பி (பார்பி) மற்றும் ஸ்ருதி மற்றும் ஜில்மில் (ஆட்டிஸ்டிக்) ஆகிய இரண்டு பெண்களுடனான அவரது உறவைச் சுற்றி வந்ததாக காட்சியாக்கப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications











