Jyothika :பாலிவுட்டில் மாதவனுடன் இணையும் ஜோதிகா.. யாரு டைரக்டர் தெரியுமா?

மும்பை : நடிகை ஜோதிகா அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவிற்கு இணையாக அவரும் ஒருபக்கம் படங்களில் சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது நடிப்பில் இறுதியாக உடன்பிறப்பே படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து அடுத்ததாக மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனிடையே தற்போது அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் ஸ்ரீ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Actress Jyothika joins with Actor Madhavan & Ajay devgn in bollywood

மாதவனுடன் பாலிவுட் படத்தில் நடிக்கும் ஜோதிகா :நடிகை ஜோதிகா 90களில் மிகப்பெரிய ஹிட் நாயகியாக முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த இவர், ஒரு கட்டத்தில் உடன் நடித்த சூர்யாவை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சில காலங்கள் நடிப்பதிலிருந்து விலகியிருந்த ஜோதிகா, 36 வயதினிலே என்ற படத்திலிருந்து ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக இவரது நடிப்பில் உடன்பிறப்பே படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அண்ணன் -தங்கை பாசத்தை பேசிய இந்தப் படத்தில் சசிக்குமார் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் அடுததடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஜோதிகா. அடுத்ததாக மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Actress Jyothika joins with Actor Madhavan & Ajay devgn in bollywood

காதல் தி கோர் என்ற படத்தில்தான் மம்முட்டியுடன் ஜோதிகா இணைந்து நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மலையாளத்தில் முன்னணி இயக்குநரான ஜோ பேபி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நடுத்தர வயதினரின் காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை மம்முட்டியே தயாரித்துள்ளார்.

இதனிடையே தற்போது மும்பையில் குடும்பத்தினருடன் செட்டில் ஆகியுள்ள ஜோதிகா அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் கமிட்டாகி வருகிறார். ஏற்கனவே ஸ்ரீ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக குயின் படத்தை இயக்கிய விகாஸ் இயக்கவுள்ள புதிய படத்தில்தான் தற்போது ஜோதிகா இணைந்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் நடிக்கவுள்ள நிலையில், தற்போது ஜோதிகாவும் கமிட்டாகியுள்ளார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட் படங்களில் அடுததடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் ஜோதிகா. சூப்பர்நேச்சுரல் த்ரில்லராக இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம் வாஷ் என்ற குஜராத்தி படத்தின் ரீமேக்காக உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X