பயோபிக் படத்தில் நடிக்கும் ஜோதிகா.. அடுத்தடுத்து பாலிவுட்டில் பிஸி!

சென்னை: தமிழ் சினிமாவின் எவர் கிரீன் நடிகை என்று பெயர் எடுத்த நடிகை ஜோதிகா, மும்பையில் செட்டிலாகி அடுத்த பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் பயோபிக் படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படம் விரைவில் வெளியாக உள்ளது.

நடிகை ஜோதிகா, ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர், தமிழ், இந்தி, மலையாளம் , தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள இவரின் தனித்துவமான நடிப்பும், துரு துருப்பான பார்வையும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று.

Actress jyothika next bollywood movie srikanth

காதல்: இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். இந்த படத்தைத் தொடர்ந்து, உயிரிலே கலந்தது, மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், ஜூன் ஆர் என பலத்திரைப்படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக இருந்த இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார்.

ஜோதிகா ரீ என்ட்ரி: திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என்று சூர்யாவின் அப்பா சிவக்குமார் போட்ட கட்டளையால் படத்தில் நடிக்காமல் இருந்த அவர், பின் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசு சிறந்த நடிகைக்கான விருது வழங்கி உள்ளது. இந்த படத்திற்கு பிறகு ராட்சசி, மகளிர் மட்டும், உடன்பிறப்பே பல திரைப்படங்களில் நடித்தார்.

Actress jyothika next bollywood movie srikanth

ஷைத்தான்: தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜோ, மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் கணிசமான வசூலை அள்ளியது. இதைத்தொடர்ந்து கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் செட்டினான ஜோதிகா, 26 ஆண்டுகளுக்கு பின் இந்தியில் ஷைத்தான் என்ற படத்தில் நடித்துள்ளார். விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். பிளாக் மேஜிக் ஹாரர் பாணியில் உருவான இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

பயோபிக் படத்தில்: இந்த படத்தை தொடர்ந்து நடிகை அடுத்ததாக பார்வையற்ற மாற்றுத்திறனாளியான தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் கமிட்டாகி உள்ளார். இதில் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடித்துள்ளார். இப்படத்திற்கு முதலில் ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு ஸ்ரீகாந்த் என வைக்கப்பட்டுள்ளது. இப்படம் மே மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X