மின்சார கனவு நாயகி கஜோல்..இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார்.. வாழ்த்தும் பிரபலங்கள் !
மும்பை : பாலிவுட்டின் கனவு கன்னியாக இன்று வரை வலம் வரும் நடிகை கஜோல் இந்திய ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட புகழ்பெற்ற நடிகையாக இருந்து வருகிறார்.
நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து பாலிவுட் சினிமாவின் ஒப்பற்ற நடிகையாக கஜோல் வலம் வருகிறார்.
நடிப்பு நடனம் காமெடி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் நடிகை காஜல் ஆகஸ்ட் 5ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி பல்வேறு திரை பிரபலங்களும் நண்பர்களும் வாழ்த்து கூறி வரும் நிலையில் அன்று முதல் இன்று வரை ரசித்து வரும் இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பொழிந்த வண்ணம் உள்ளனர்.

சிறந்த ஜோடி
இந்திய சினிமாவின் ஒப்பற்ற நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை காஜல் தேவ்கான் தனது நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கொண்டு இன்றுவரை முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஹிந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டு வரும் காஜல் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இவர்கள் பாலிவுட் சினிமாவின் சிறந்த ஜோடி என பல ஆண்டுகளாக புகழப்பட்டு வருகின்றனர்.

தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே
நடிகர் ஷாருக்கானுடன் இவர் முதன்முதலாக இணைந்து நடித்த பாஜிகர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து வசூல் சாதனை புரிந்த நிலையில், 1995ஆம் ஆண்டு மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்த "தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே" திரைப்படம் இன்று வரை இந்திய சினிமாவில் எந்த ஒரு திரைப்படமும் செய்யாத சாதனையை செய்து வருகிறது.

சிறப்பு அந்தஸ்தை
தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே திரைப்படம் வெளியாகி இன்று வரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை கடந்த நிலையில் திரையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஓடிய ஒரே இந்திய திரைப்படம் என்ற சிறப்பு அந்தஸ்தை இந்த திரைப்படம் பெற்றுள்ளது. அதிக வருடங்கள் மட்டுமல்லாமல் வசூலிலும் இந்திய அளவில் பல திரைப்படங்களும் அசைக்கமுடியாத வசூல் சாதனையை இந்த திரைப்படம் செய்து வருகிறது. மேலும் இன்றளவும் இந்த திரைப்படம் மும்பையிலுள்ள மரதா மந்திர் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

தொடர்ந்து வெற்றி
இவ்வாறு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில், மேலும் பல படங்களில் இணைந்து இன்று வரை நடித்து வருகின்றனர். இவ்வாறு இந்தி சினிமாவின் ஒப்பற்ற நடிகையாக விளங்கி வந்த கஜோல் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகத்தை
தமிழில் 1997 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்த காஜல், நடித்த முதல் படத்திலேயே தமிழிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

4 தேசிய விருதுகளை
மின்சார கனவு திரைப்படத்தில் காஜலின் நடிப்பு மிகப் பிரபலமாக பேசப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பல விருதுகளை வென்றது. மேலும் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 4 தேசிய விருதுகளை வென்று இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றது.

வெண்ணிலவே வெண்ணிலவே
சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நடன அமைப்பாளர், சிறந்த ஆண் பாடகர், மற்றும் சிறந்த பெண் பாடகர் என நம் அனைவரையும் இசையால் கொள்ளை கொண்ட மின்சாரக்கனவு திரைப்படம் இந்திய அளவில் சிறந்த திரைப்படமாக போற்றப்பட்டது. மேலும் இந்த படத்தில் பிரபு தேவா மற்றும் காஜல் இருவரும் இணைந்து "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலுக்கு ஆடிய நடனம் இன்றளவும் சிறந்த பாடலாகவும், சிறந்த நடன கோர்ப்பாகவும் இருந்து வருகிறது.

மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி
மின்சார கனவு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை நேரடி தமிழ் படங்களில் ரசிக்க வைத்து வந்த காஜல் சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் அது துடிப்பான நடிப்புடன் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஒட்டுமொத்த திரையுலகமும் வாழ்த்து
இவ்வாறு நடிப்பு, நடனம், காமெடி என பல மொழிகளில் நடித்து அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் நடிகை காஜல் ஆகஸ்ட் 5ஆம் தேதியான இன்று தனது 46வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி ஒட்டுமொத்த திரையுலகமும் இவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வரும் நிலையில், இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பொழிந்த வண்ணம் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











