பிக் பாஸுக்கே டஃப் … புது ரியாலிட்டி ஷோ… தொகுப்பாளர் யார் தெரியுமா ?

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே டஃப் கொடுக்கும் புதிய கேம் ஷோ ஒன்று விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை பாலிவுட் பிரபல நடிகை ஒருவர் தொகுத்து வழங்க உள்ளார்.

புதிய நிகழ்ச்சி குறித்த இந்த செய்தி சினிமா, சின்னத்திரை மற்றும் ஓடிடி ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமான இந்த ரியாலிட்டி ஷோ இந்தி,தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

விரைவில்

விரைவில்

இந்தியில் பிக் பாஸ் சீசன் 15 கடந்த மாதம் ஜனவரி 30ந் தேதி தான் முடிந்தது. இந்த நிகழ்ச்சியை சல்மான் தொகுத்து வழங்கினார். இதில் டைட்டிலை தேஜஸ்வி பிரகாஷ் பெற்றார். விரைவில் பிக் பாஸ் சீசன் 16 தொடங்க உள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் முடிந்த நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. 24 மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

லாக் அப் புது ஷோ

லாக் அப் புது ஷோ

இந்நிலையில், பிக் பாஸ் போன்ற மற்றுமொரு ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு லாக் அப் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் சிறை போன்று அமைக்கப்பட்டுள்ள செட்டிற்குள் போட்டியாளர்கள் அடைக்கப்படுவார்கள். இந்த சிறையில் போட்டியாளர்கள் 72 நாட்கள் இருக்க வேண்டும் யார் தாக்குபிடித்து 72 நாட்கள் சிறைக்குள் இருக்கிறார்களோ அவர வெற்றியாளர்.

பிப்ரவரி 27ந் தேதி முதல்

பிப்ரவரி 27ந் தேதி முதல்

இந்த புது நிகழ்ச்சியை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி எம்எக்ஸ் பிளேயர் மற்றும் ஆல்ட் பாலாஜி ஆகிய ஓடிடி தளத்தில் பிப்ரவரி 27ந் தேதி முதல் 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ளது. பாலிவுட் பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இந்த நிகழ்ச்சியை தயாரிக்க உள்ளார்.இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X