20 கிலோ குறைஞ்சிடுச்சு.. ஆனா ஸ்ட்ரெச் மார்க் இருக்கே.. தலைவிக்கு பிறகு கங்கனாவின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்!

சென்னை: தலைவி படத்திற்கு பிறகு நடிகை கங்கனா ரனாவத் 20 கிலோ எடையை குறைத்துள்ளதாக கூறியுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். பல முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் நடிகை கங்கனா.

சமீபத்தில் அவரது நடிப்பில் தலைவி படம் ரிலீஸ் ஆனது. மறைந்த அரசியல் தலைவர் மற்றும் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது.

ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத்

ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத்

இந்தப் படத்தை ஏஎல் விஜய் இயக்கியிருந்தார். ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்திருந்தனர். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அதிகம் மெனக்கெடு

அதிகம் மெனக்கெடு

தலைவி படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழியில் ரிலீஸ் ஆனது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதும் தலைவி படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை குவிக்கவில்லை. இப்படத்திற்காக நடிகை கங்கனா ரனாவத் அதிகம் மெனக்கெட்டிருந்தார். மெல்லிய தோற்றத்தை கொண்ட கங்கனா ரனாவத் தலைவி படத்திற்காக பெருமளவு எடையை கூட்டியிருந்தார்.

ட்ரான்ஸ்ஃபர்மேஷன் போட்டோ

ட்ரான்ஸ்ஃபர்மேஷன் போட்டோ

6 மாதங்களில் 20 கிலோ எடையை கூட்டியிருந்தார் கங்கனா ரனாவத். படப்பிடிப்பு முடிந்த பிறகு மீண்டும் தனது எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் கங்கனா. அதன்படி கடந்த 6 மாதத்தில் 20 கிலே எடையை குறைத்துள்ளார் கங்கனா ரனாவத். 6 மாதத்தில் தனது ட்ரான்ஸ்ஃபர்மேஷன் போட்டோவையும் கங்கனா ரனாவத் தனது டிவிட்டர் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Recommended Video

Thalaivi Kangana Ranaut EXCLUSIVE INTERVIEW | Vijay தான் என்னோட Ultimate Hero
எடை குறைந்த படம்

எடை குறைந்த படம்

அதில் தனது தலைவி படத்தையும் தற்போது எடை குறைந்த போட்டோவையும் ஷேர் செய்துள்ளார் கங்கனா ரனாவத். மேலும் 6 மாதங்களில் 20 கிலோ எடையை அதிகரித்து 6 மாதங்களுக்குள் அனைத்தையும் இழந்தேன். அதுவும் முப்பதுகளில் என் உடலில் பல விஷயங்களை குழப்பிவிட்டது. உடம்பில் நிரந்தர ஸ்ட்ரெச் மார்க்குகள் உள்ளன. ஆனால் கலை ஒரு விலையுடன் உயிர்பெறுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X