Dhanush: பாலிவுட்டில் தனுஷ்.. Tere Ishk Mein படத்தோட ஹீரோயின் யார் தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் டிசம்பரில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகிவரும் டி50 படத்தில் மும்முரமாக கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.
இந்தப் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா மற்றும் இந்திப் படம் ஒன்றிலும் அவர் கமிட்டாகியுள்ளார். அடுத்தடுத்து நடிக்கவும் உள்ளார்.

நடிகர் தனுஷுடன் ஜோடி சேரும் கியாரா அத்வானி: நடிகர் தனுஷ் கோலிவுட்டில் துவங்கிய பயணத்தை பாலிவுட், ஹாலிவுட் என விரிவு படுத்தியுள்ளார். இடையில் சமீபத்தில் டோலிவுட்டிலும் கால் பதித்து தன்னுடைய மகுடத்தை மேலும் மெருகேற்றியுள்ளார். இயக்குநராக ப பாண்டி படத்தை இயக்கியிருந்த தனுஷ் தற்போது டி50 படத்தை இரண்டாவது முறையாக இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில், படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் தனுஷும் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் டி50 படத்திற்காக தன்னுடைய ஹேர்ஸ்டைல் உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான வகையில் தயாரித்து வருகிறது. படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்று முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் தனுஷின் சகோதரர்களாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார். மேலும் பிரபல தெலுங்கு ஹீரோ நாகர்ஜூனாவும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். அக்டோபர் மாதத்திற்குள் டி50 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு இந்தப் படத்தில் தனுஷ் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், படம் டிசம்பர் 15ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பந்தயத்தில் இந்தப் படம் இணையவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், சூட்டிங்கில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர், டீசர் உள்ளிட்டவை முன்னதாக வெளியான நிலையில் விரைவில் படத்தின் ட்ரெயிலரும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலிவுட்டில் தனுஷ் கமிட்டாகியுள்ள Tere Ishk Mein படத்தின் சூட்டிங் குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் சேகர் என்ற கேரக்டரில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. Air Forceஐ மையமாக கொண்டு காதல் கதையாக இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் படத்தின் சூட்டிங் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேகர் கம்முலா மற்றும் இந்த பாலிவுட் படங்களில் ஒரே நேரத்தில் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்தப் படத்தில் தனுஷுடன் யார் ஜோடி சேர்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், படத்தில் கியாரா அத்வானி தனுஷுக்கு ஜோடியாகவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தப் படத்தின் முதல்கட்ட ஷெட்யூல் உத்தரபிரதேசத்தில் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











