கார்டு மேல உள்ள நம்பர சொல்லுங்கோ.. நடிகை நக்மாவை ஏமாற்றி ஒரு லட்சம் அபேஸ்.. என்ன நடந்தது?

மும்பை: நடிகை நக்மாவிடம் வங்கி அதிகாரிகள் போல் பேசி ஒரு லட்சம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் திருடியிருக்கின்றனர்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகாவின் சகோதரி நக்மா. நக்மாவும் நடிகை ஆவார். தமிழில் அவர் பாட்ஷா, பிஸ்தா, காதலன் உள்ளிட்ட பல படங்களில் நடிருத்திருக்கிறார். ஒருகாலத்தில் நக்மாவும் தமிழில் நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாட்ஷாவில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி

பாட்ஷாவில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி

1990ஆம் ஆண்டே பாலிவுட்டில் அறிமுகமான நக்மா ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துவந்தார். அவரை இயக்குநர் ஷங்கர் தனது காதலன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தார். முதல் படம் ஹிட்டாக அடுத்தடுத்து தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான பாட்ஷா படத்தில் நடித்து நிறைய ரசிகர்களை சம்பாதித்தார்.

நக்மாவுக்கு குவிந்த தமிழ் பட வாய்ப்புகள்

நக்மாவுக்கு குவிந்த தமிழ் பட வாய்ப்புகள்

பாட்ஷா படத்தில் நடித்த பிறகு ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், மேட்டுக்குடி, பெரிய தம்பி, அரவிந்தன், பிஸ்தா, ஜானகிராமன் என பல படங்களில் நடித்தார். அதன் பிறகு ஹீரோயின் வாய்ப்புகள் கம்மியாக தீனா படத்தில் ஒரு பாடலுக்கும், சிட்டிசன் படத்தில் சிபிஐ அதிகாரியாகவும் நடித்தார். அந்தப் படம்தான் அவர் தமிழில் நடித்த கடைசி படமாகும்.

அரசியல்வாதியான நக்மா

அரசியல்வாதியான நக்மா

தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், போஜ்புரி மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இவர் கடைசியாக 2008ஆம் ஆண்டு போஜ்புரி மொழியில் நடித்ததோடு நடிப்புக்கு மூட்டை கட்டி அரசியலில் அடியெடுத்துவைத்தார். இப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.

நக்மாவிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்

நக்மாவிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்

இந்நிலையில் நடிகை நக்மாவின் செல்ஃபோனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் இருந்த லிங்க்கை நக்மா க்ளிக் செய்ய ஒரு நபர் தொடர்புகொண்டு தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு, வங்கியின் வாடிக்கையாளர் விவரத்தை கேட்டிருக்கிறார். அதனையடுத்து இவரும் அதனை கூற, சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து 99 ஆயிரத்து 998 ரூபாய் திருடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மும்பை சைபர் கிரைமில் புகார் கொடுத்திருக்கிறார்.

என்ன நடந்தது - நக்மா அளித்த விளக்கம்

என்ன நடந்தது - நக்மா அளித்த விளக்கம்

இதுகுறித்து பேசிய நக்மா, "லிங்க்கில் கேட்கப்பட்டிருந்த விவரங்களை நான் பகிரவில்லை. இருப்பினும் எதிர்முனையில் பேசிய நபர், கே.ஒய்.சியை புதுப்பித்து தருவதாக கூறி எனது இண்டெர்நெட் பேங்கிங் மூலம் வேறு வங்கி கணக்கிற்கு பணத்தை பரிவர்த்தனை செய்திருக்கிறார். நல்ல வேளையாக நான் பெரிய தொகை எதையும் இழக்கவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X