மூனாம்தாரமா போறதுலாம் சர்வ சாதரணம்.. அதுல என்ன தப்பு? புதிதாய் திருமணம் முடித்த பிரபல நடிகை தடாலடி!
மும்பை: தொழில் அதிபருக்கு மூன்றாவது மனைவியான பிரபல நடிகை அதெல்லாம் இப்போது சர்வ சாதரணம் என தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை மற்றும் பிக்பாஸ் சீசன் 12ல் பங்கேற்றவர் நேகா பென்ட்ஸ். 1999 ஆம் ஆண்டில் 'பியார் கோய் கெல் நஹின்' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் நேகா.
பின்னர் தேவதாஸ் என்ற படத்தில் நடித்தார். நேகா ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார் நேகா.

திருமணம்
இவர் தனது நீண்ட நாள் காதலரான ஷருதுல் பயாஸை கடந்த 5ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

கவர்ச்சி உடை
தனது வரவேற்பு நிகழ்ச்சியில் நேகா, புது மணப் பெண்ணை போல் இல்லாமல் ஒரு மாடலை போன்று கவர்ச்சியான உடையில் பங்கேற்றார். ஸ்ட்ராப்லெஸ் கவுனில் நீண்ட ஓபன் வைத்து தொடை வரை தெரிந்தது.

மூன்றாவது திருமணம்
இந்நிலையில் நேகாவின் திருமணம் குறித்த பல்வேறு அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது நடிகை நேகா திருமணம் செய்திருக்கும் தொழில் அதிபரான ஷருதுல் பயாஸுக்கு இது மூன்றாவது திருமணம் ஆகும்.

கழுத்தை நீட்டியிருக்கிறார்
ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானவர் ஷருதுல். அவருக்கு மூன்றாம் தாரமாக கழுத்தை நீட்டியிருக்கிறார் நேகா.

கோபமாக பதில்
நேகா, மூன்றாம் தாரமாக செல்வது குறித்து பலரும் திருமணத்திற்கு முன்பே கேள்வி எழுப்ப, அது குறித்து வாய் திறக்காமல் அமைதி காத்து வந்தார். இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகும் அந்த கேள்வி தொடர கோபமாக பதில் கூறியிருக்கிறார் நேகா.

கோபமாக கேள்வி
உலகத்தில் யாருமே மூன்றாம் தாரமாக திருமணம் செய்துகொள்வதில்லையா? நான் மட்டும்தான் மூன்றாவது மனைவியாகிறேனா என கோபமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சரியாக தெரியவில்லை
மேலும் இன்று, ஒருவர் மூன்று அல்லது நான்கு பேரை திருமணம் செய்து கொள்வதெல்லாம் சர்வ சாதாரணம். எல்லோரும் அவரவர் வாழ்க்கைக்கான முடிவை எடுத்து அதன் வழியில் பயணிக்கிறார்கள் என்பது மிக நன்றாக தெரிந்தும், இது ஏதோ மிகப்பெரிய தவறு போல பேசுவது சரியாக தெரியவில்லை என கூறியுள்ளார்.

திருமணத்திற்கு முன்பு..
ஒரு ஆண், ஏற்கனவே இரு பெண்களோடு உறவில் இருந்தார் என்பதைத்தான் குற்றமாக இந்த சமூகம் பார்க்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது, திருமணத்துக்கு முன்பே கூட, எல்லோருமே சிலருடன் தொடர்பில்தான் இருக்கின்றனர் என தடாலடியாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











