Don't Miss!
- News
"ஷட் அப்".. இங்கிலாந்து வீரரிடம் கத்திய கோலி.. சண்டையை விடுங்க.. அதுக்கு அப்பறம் நடந்த ட்விஸ்ட்!
- Finance
உங்க வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா.. சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை பற்றி தெரிஞ்சுகோங்க!
- Sports
கபில்தேவ், முகமது ஷமி சாதனையை முறியடித்த பும்ரா.. இங்கிலாந்துக்கு எதிராக 5வது டெஸ்ட்டில் அபாரம்
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை… காதலருக்கு தொடர்பா ?.. போலீசார் விசாரணை !
கொல்கத்தா: பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை வழக்கில், அவருடைய காதலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல நடிகை பல்லவியின் மறைவு அவரது சக நடிகர்களையும் , நண்பர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவுக்கு ட்விட்டரில் பல ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பல்லவி தே
'மோன் மனே நா' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கதாநாயகியாக நடித்தவர் பெங்காலி நடிகை பல்லவி தே. இவர் கொல்கத்தாவில் கர்ஃபாவில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். நேற்று காலை, அவரது வீட்டுக்கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மின் விசிறியில் தூக்கில் தொங்கியநிலையில் இருந்தார் பல்லவி.

ரசிகர் ஷாக்
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு அருகிலுள்ள எம்.ஆர் பங்கூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பல்லவி தே, இறப்பை உறுதிப்படுத்தினர். பல்லவின் தற்போலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தி அவரது சக நடிகர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நான் வீட்டில் இல்லை
நடிகை பல்லவியும், அவரது காதலர் சாக்னிக் சக்ரவர்த்தியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். பல்லவியின் தற்கொலையை அடுத்து, சாக்னிக் சக்ரவர்த்தியிடம் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, பல்லவிக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அந்த நேரத்தில் நான் வீட்டில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

என்ன நடந்தது
மேலும், சாக்னிக்கின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சாக்னிக்கின் தாயார், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்தனர். இதில், எங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், இவர்கள் விரும்பியதால் ஒன்றாக இருக்க அனுமதித்தோம். அவர்கள் இருவருக்கும் இடையே, பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. என்ன நடந்தது... எதற்காக பல்லவி தற்கொலை செய்து கொண்டால் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்.

சிக்குவாரா காதலர்?
மேலும், பல்லவியின் தற்கொலை குறித்து, அவருடன் சீரியலில் நடித்த சக நடிகரிடம் போலீசார் விசாணையை தொடங்கி உள்ளனர். ஆனால், போலீசாரின் பார்வை அவரது காதலர் சாக்னிக் சக்ரவர்த்தியின் மீதே அழுத்ததாக பதிந்துள்ளதாக கூறப்படுகிறது. பல்லவியின் நெருங்கி நண்பர்களிடம், சாக்னிக் சக்ரவர்த்தியின் நடவடிக்கை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.