கிராமி விருது விழாவிலும் சூடேற்றிய பிரபல நடிகை.. உள்ளாடை அணியாமல் மொத்த முதுகையும் காட்டி குசும்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கிராமி விருது வழங்கும் விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா, உள்ளாடை அணியாமல் மொத்த முதுகையும் காட்டிய போட்டோ வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று விடுகிறார். குறிப்பாக அவர் உடுத்தும் உடையாலேயே அவர் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.
பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு
அமெரிக்காவை சேர்ந்த பாப் சிங்கரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

வித்தியாசமான உடை
ட்ரென்ட் செட்டரான பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பிறகு உடை விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். ஒவ்வொரு முறையும் அவர் உடுத்தும் உடை வைரலாகி வருகிறது. உடுத்தும் வித்தியாசமான கவர்ச்சியான உடைகளாலே அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டு வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

புத்தாண்டு கொண்டாட்டம்
அந்த வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவர் உடுத்தியிருந்த பிங்க் நிற உடை பெரிதும் பேசப்பட்டது. ஒரு தையல் கூட இல்லாமல் ஒரே ஒரு வளையத்தை வைத்து உருவாக்கப்பட்ட அந்த உடைக்கு உள்ளாடை அணியாமல் மிக கவர்ச்சியாக தோன்றினார் பிரியங்கா சோப்ரா.

பூப்போட்ட பாவாடை
அதனை தொடர்ந்து கணவருடன் இந்தியா திரும்பிய அவர், கறுப்பு நிற பூப்போட்ட பாவாடையில் வந்திறங்கினார். மிகவும் ட்ரான்ஸ்ப்ரன்ட்டான அந்தப் பாவாடையில் வைரலானார் பிரியங்கா சோப்ரா. இதேபோல் கோல்டன் குளோப் விருது விழாவிலும் கணவருடன் பங்கேற்ற அவர் செம கிளாமரான உடையில் கலந்து கொண்டார்.

கிராமி விருது விழா
இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் கிராமி விருது விழாவிலும் அசத்தலாக பங்கேற்றுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. கிராமி விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதற்கான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகிறது. இதில் சிவப்புக் கம்பள வரவேற்பில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் பங்கேற்க உள்ளார்.

மொத்த முதுகும்
அதில் அவர் பங்கேற்கும் முன் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கோல்டன் நிற நீண்ட சேட்டின் கவுன் அணிந்திருக்கிறார். அந்த கவுனில் நீண்ட டீப் ஓபன் உள்ளது. அதோடு இடுப்புக்கு மேலிருந்து முதுகு முழுவதும் தெரிகிறது. இந்த உடைக்கு அவர் பிரா அணியவில்லை என தெளிவாக தெரிகிறது. பிரியங்கா சோப்ராவின் இந்த போட்டோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











