கார் வாங்க வசதியில்லை.. வருத்தப்பட்ட நடிகை.. பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்த நண்பர்கள்!
மும்பை : கார் வாங்க வசதியில்லை என வருத்தப்பட்ட நடிகைக்கு பி.எம்.டபிள்யூ காரை, அவரது நண்பர்கள் பரிசாக அளித்துள்ளனர்.
இந்த தகவலை கேள்விபட்ட ரசிகர்கள்...ம்ம்ம்...நண்பர்கள் இருந்தா இப்படி இருக்க வேண்டும் என்று பெருமூச்சு விட்டுவருகின்றனர்.
மாடல் அழகியான அந்த பாலிவுட் நடிகை இந்தி,தெலுங்கு, கன்னடம், மராத்தி, தமிழ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ராக்கி ராவந்த்
ராக்கி ராவந்த், தமிழில் என் சகியே,முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் இவர், ஆண் நண்பருக்கு பொது இடத்தில் முத்தம் கொடுப்பது, அரைகுறை ஆடை, ஆபாச ஆட்டம், எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவார்.

இந்த பிக்பாஸ்
சால்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 14 மற்றும் சமீபத்தில் முடிந்த சீசன் 15 நிகழ்ச்சியிலும் ராக்கி சாவந்த் கலந்து கொண்டுள்ளார். ஆனால், ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. கடந்த ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாவும் தனக்கு அற்புதமான கணவர் கிடைத்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.

கணவரை பிரிந்தார்
பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரித்தேஷ்ஷை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து, ரிதேஷ், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதுடன், அவர் மீது அவரது முதல் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார் என்பதும் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து, காதலர் தினத்தன்று தனது கணவரை விட்டு பிரிந்து விட்டதாக அறிவித்து இருந்தார்.

பி.எம்.டபிள்யூ கார் பரிசு
இந்நிலையில், எப்போதும் சர்ச்சையில் சிக்கும் இந்த நடிகை, கடந்த மாதம், தனக்கு கார் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை என்றும், இருக்கும் இந்த காரே போதும் என்றும் ஒருபதிவை போட்டு இருந்தார். இதைப்பார்த்த ராக்கி சாவந்த்தின் நண்பர்கள், அவருக்கு, பி.எம்.டபிள்யூ எக்ஸ் 1 கரை பரிசாக அளித்துள்ளனர். இதன் விலை ரூ.50 லட்சம். இதுபற்றி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகை ராக்கி சாவந்த், அந்த காரில் கேக் வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நண்பர்கள் அடில் மற்றும் ஷெல்லி லதெர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











