பிக்பாஸ் ஓடிடியில் இருந்து திரும்பிய தங்கை.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபல நடிகை!
மும்பை: பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்று திரும்பிய தனது தங்கையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வரவேற்றுள்ளார் பிரபல நடிகை.
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ரா.
இவர் ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக வலுவான ஆதரங்கள் உள்ளது கடந்த 2 மாதங்களாக சிறையில் உள்ளார்.

குடும்ப மானம் போய்விட்டது
அவரது வழக்கில் நாள் தோறும் ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது. கணவர் ஆபாச பட சர்ச்சையில் சிக்கியதால் நடிகை ஷில்பா ஷெட்டியும் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார். கணவரால் குடும்ப மானமே போய்விட்டதாக கருதும் ஷில்பா ஷெட்டி கணவரை பிரிய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேலையில் பிஸி
இருப்பினும் தனது வேலையில் கவனமாக உள்ளார் ஷில்பா ஷெட்டி. தான் நடுவராக உள்ள சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஷில்பா ஷெட்டி, வேலையில் பிஸியாக இருந்ததால் தனது கணவர் என்ன வேலை செய்தார் என்பது குறித்து அறிந்திருக்கவில்லை என்றும் கூறியிருந்தார் நடிகை ஷில்பா ஷெட்டி.

மீண்டு வருவேன்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஷில்பா ஷெட்டி அவ்வபோது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். மேலும் தங்களின் குடும்பம் சந்திக்கும் பிரச்சனையில் இருந்தும் விரைவில் மீண்டு வருவேன் என குறிப்பிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி ஷேர் செய்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டிப்பிடித்து முத்தம்
அதாவது தனது தங்கையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ள ஷில்பா ஷெட்டி, தனது தங்கை திரும்பி விட்டதாக கூறி பதிவிட்டுள்ளார். அதாவது ஷில்பா ஷெட்டியின் தங்கை பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கியது.

16 போட்டியாளர்கள்
மொத்தம் 42 எபிசோடுகள் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி கடந்த 18ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் திவ்யா அகர்வால் வெற்றி பெற்றார். இதன் மூலம் பிக்பாஸ் ஓடிடியின் முதல் ட்ரோஃபியை கைப்பற்றியுள்ளார் திவ்யா அகர்வால். பிக்பாஸ் ஓடிடியை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான கரண் ஜோகர் தொகுத்து வழங்கினார்.

அக்கா தங்கைக்குள் அன்பு
இந்நிலையில் பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்றிருந்த ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமீதா ஷெட்டி வீடு திரும்பியுள்ளார். அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்து வரவேற்றுள்ளார் ஷில்பா ஷெட்டி. ஷில்பா ஷெட்டிக்கும் ஷமீதா ஷெட்டிக்கும் இடையே நல்ல பாண்ட் உள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் சப்போர்ட் செய்து கொண்டுள்ளனர்.

பிக்பிரதர் நிகழ்ச்சி
ஷமீதா பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போதே தனது தங்கைக்கு ஹார்ட்ஃபெல்ட் மெஸேஜ்ஜை அனுப்பியிருந்தார் நடிகை ஷில்பா ஷெட்டி. இங்கிலாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சக போட்டியாளர்களால் நிறவெறிக்கு ஆளானார் நடிகை ஷில்பா ஷெட்டி. இதன் மூலம் பெரும் பிரபலமானார் ஷில்பா ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











