ஹே மின்னலே.. ஹே மின்னலே.. புடவையில் ஜொலிக்கும் ஜான்வி கபூர்.. வர்ணிக்கும் பேன்ஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் தனது வசீகரமான அழகால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். ஸ்ரீ தேவியின் மகள் என்ற அறிமுகத்தோடு சினிமாவில் அறிமுகமான ஜான்விகபூர் , தனது அம்மாவை போல தென்னிந்திய சினிமாவில் கால்பதித்துள்ளார். ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக இவர் நடித்த தேவாரா படம் கணிசமான வசூலை அள்ளியது. படத்தில் பிஸியாக நடித்தாலும் இணையத்தில் பிஸியாக இருக்கும் இவர் தற்போது சேலையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

80களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கோலிவுட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி சினிமாவில் இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். அதன் இவர் தமிழ் சினிமாவில் பார்க்கமுடியவில்லை.

janhvi kapoor bollywood saree

ஸ்ரீதேவி மகள்: அம்மா போலவே சினிமா மீது ஆர்வம் கொண்ட ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் வெளியான தடக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் தனது தடத்தை பதித்தார். இவர் அறிமுகமான முதல் படமே ஜான்விக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரீஸ், ரோகி, குட்லக், ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் நாகார்ஜூனாவின் இளைய மகன் நடிகர் அகில் அக்கினேனி நடிக்கும் தீரா என்ற படத்தில் ஜான்வி கமிட்டாகி உள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது.

janhvi kapoor bollywood saree

இணையத்தில் ஆக்டிவ்: நடிப்பு மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். குறிப்பாக ஜான்வி தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருவது வழக்கம். புடவையின் விலை: அந்த வகையில்,தற்போது அழகிய வேலைபாடு கொண்ட பிங்க் நிற சேலையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புடவைக்கு ஏற்றபடி வளையல்,கம்பல் என அனைத்தும் அம்சமாக உள்ளது.

janhvi kapoor bollywood saree

புடவையின் விலை: இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வரும் வேலையில், சிலர் இந்த புடவையின் விலை என்னவாக இருக்கும் என இணையத்தில் தேடி வருகின்றனர். இந்த, லைட் வெயிட் புடவையின் விலை லட்சத்தில் இருக்கும் என்றும், பிளவுஸின் விலை ஆயிரத்தில் இருக்கும், இது முழுக்க முழுக்க கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட புடவை என பலரும் பல கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

janhvi kapoor bollywood saree

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X