டேட்டிங்னா ஓகே... மேரேஜ்னா நோ… ஆண் நண்பருக்கு டாடா காட்டிய டாப்ஸி.. என்ன நடந்தது ?
சென்னை : தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி, தனது காதல் அனுபவம் குறித்து சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
சபாஷ் மித்து, ராஷ்மி ராக்கெட், டூபாரா, லூப் லபேடா என அரை டஜனுக்கும் அதிகமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இவை அடுத்தடுத்து விரைவில் ரிலீஸாக உள்ளன.
நடிகை டாப்ஸி அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் அண்மையில் தொடங்கினார்.

பல படங்களில்
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்ஸி, தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீப காலமாக டாப்சி இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் கைவசம் பல இந்தி படங்கள் உள்ளன.

சபாஷ் மித்து
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜின் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை சபாஷ் மித்து என்ற பெயரில் இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கி வருகிறார். இதில் மித்தாலி ராஜாக டாப்ஸி பன்னு நடித்து வரும் நிலையில் இத்திரைப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

காதல் அனுபவம்
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த டாப்சி தனது இளம் வயது காதல் அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். அதில், நான் பள்ளியில் படிக்கும் போது சுமாராகத்தான் இருப்பேன். ஆனால், அழகான பல ஆண் நண்பர்கள் எனக்கு இருந்தார்கள். கல்லூரியில் படிக்கும் போது, யார் யார் கண்ணுக்கு அழகாக தெரிகிறார்களோ அவர்களுடன் டேட்டிங் செல்வேன் பிறகு அவர்கள் மீது இருந்த ஈர்ப்பு போய்விடும்.

டேட்டிங்னா ஓகே
மாதம் ஒரு பாய் பிரண்டுடன் டேட்டிங் போவேன். அப்படி ஒரு நாள் ஒரு ஆண் நண்பருடன் டேட்டிங் சென்று இருந்தேன். ஆனால், அந்த பையன் காதல், கல்யாணம், குழந்தை என்று பேச ஆரம்பித்து விட்டான். டேட்டிங்னா ஓகே... மேரேஜ்னா நோ என்பது என் பாலிசி அதை அவனுக்கு புரியவைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன் என்று கூலாக பேட்டியில் கூறியுள்ளார். அட இப்படி ஒரு பாலிசி இருக்கா... இது தெரியாம போச்சே என்று இளசுகள் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications