Johnny Sins: அடேங்கப்பா.. அந்த விளம்பரத்தில் நடிக்க ’ஜானி சின்ஸ்’ வாங்கிய சம்பளம் இவ்வளவா?

மும்பை: ஆபாச பட நடிகர்களுக்கு பாலிவுட் திரையுலகம் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருகிறது. ஆபாச நடிகையாக வலம் வந்த சன்னி லியோன் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பின்னர் இந்தி படங்களிலும் தமிழில் வடகறி படத்திலும் குத்தாட்டம் போட்டார். தொடர்ந்து பாலிவுட் முதல் கோலிவுட் வரை நடிகையாக தனது வாழ்க்கையையே அப்படியே இங்கே வந்து மாற்றிக் கொண்டார்.

நடிகை பூனம் பாண்டேவும் கிட்டத்தட்ட அப்படித்தான். இந்நிலையில், அந்த வரிசையில் அடுத்து இன்னொரு பிரபல ஆபாச நடிகர் இணைந்து விடுவார் என்றே தெரிகிறது. ரன்வீர் சிங் உடன் இணைந்து சமீபத்தில் அவர் நடித்த விளம்பரம் ஓவர் நைட்டில் தேசிய செய்தியாகவே மாறி சோஷியல் மீடியாவில் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.

Adult star Johnny Sins got 50 Lakhs for trending Ad with Ranveer Singh?

ஜானி சின்ஸ்: சன்னி லியோனை போலவே இவரும் ஆபாச படங்களில் நடித்து வரும் நடிகர் தான். இவரது புகைப்படங்களை வைத்து பல மீம்களும் டிரெண்டாகி வருகின்றன. இவரது வீடியோக்களை ரகசியமாக பல இந்திய ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பார்த்து வரும் நிலையில், இவர் யார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. எப்படி சன்னி லியோனை சிறுவர்கள் வரை தெரிந்துக் கொண்டார்களோ அதே போல ஜானி சின்ஸும் அனைவருக்கும் அறிந்த முகமாகவே மாறியுள்ளார்.

ரன்வீர் சிங்குடன் கட்டிப்பிடித்து: இந்தி சீரியல் டைப்பில் ரன்வீர் சிங் மற்றும் ஜானி சின்ஸ் இணைந்து நடித்த புதிய விளம்பரம் ஒன்று தான் தற்போது பாலிவுட்டின் முக்கிய டாப்பிக்காக மாறியிருக்கிறது. உடலுறவுக்கான சக்தியை பலப்படுத்தும் மாத்திரையை ரன்வீர் சிங் மற்றும் ஜானி சின்ஸ் இணைந்து விளம்பரப்படுத்தி உள்ளனர். அந்த விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட ட்ரோல்களையும் மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

ஆடை அணியாமல் ரன்வீர் சிங்: முன்னதாக தீபிகா படுகோன் கணவர் ரன்வீர் சிங் ஆடையே அணியாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து பெரும் சர்ச்சையை கிளப்பினார். அவருக்கு ஏகப்பட்ட மக்கள் கண்டனங்களை தெரிவித்து ஆடைகளை எல்லாம் அனுப்பினர். இப்போது, ஆபாச நடிகருடன் இணைந்து நடித்திருப்பதை பார்த்த பலரும் விரைவில் ரன்வீர் சிங்கை ஆபாச படங்களில் பார்க்கலாம் போல என கலாய்த்து வருகின்றனர்.

இத்தனை லட்சம் சம்பளமா?: இந்தி விளம்பரத்தில் ஜானி சின்ஸ் நடித்ததற்காக அவருக்கு 50 லட்சம் ரூபாயை சம்பளமாக அந்த விளம்பர நிறுவனம் வழங்கியிருப்பதாகவும் ரன்வீர் சிங்குக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மேலும், ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X