ஆர்யான் ஜாமின் மறுப்புக்கு இதுதான் காரணமா...ஷாருக்கான் குடும்பத்தின் புதிய கோரிக்கை

மும்பை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் 23 வயது மகன் ஆர்யான் கான், போதைப் பொருள் வழக்கில் அக்டோபர் 2 ம் தேதி கைது செய்யப்பட்டார். மும்பை கடல் பகுதியில் சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

After Aryans bail plea rejected again, Shahrukh family planning for new option

இது தொடர்பாக தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கப்பலில் நடத்திய அதிரடி சோதனையின் போது ஆர்யான் கான், அவரது நண்பர்கள் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஆர்யானுக்கு ஜாமின் வழங்க ஆரம்பம் முதலே NCB அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Recommended Video

போதை பொருள் பயன்படுத்தினாரா VijayDevarkonda பட நடிகை Ananya Pandey | Shahrukh Khan

அக்டோபர் 3 ம் தேதி முதல் சிறையில் இருக்கும் ஆர்யானுக்கு ஏற்கனவே நான்கு முறை ஜாமின் மறுக்கப்பட்டது. இதனால் நேற்று ஜாமின் மனு மீதான விசாரணை நடந்த போது, மகன் ஆர்யான் இந்த முறை ஜாமின் கிடைத்து நிச்சயம் வீட்டிற்கு வந்து விடுவான் என ஷாருக்கானும் அவரது மனைவி கவுரி கானும் அதிக நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

ஆனால் நேற்றும் ஆர்யானுக்கு ஜாமின் கொடுக்க மறுத்து விட்டது மும்பை சிறப்பு கோர்ட். ஆர்யான் உள்ளிட்ட அனைவரின் ஜாமின் மனுக்களையும் கோர்ட் நிராகரித்து விட்டது. இதற்கு வலுவான காரணங்கள் உள்ளதாக NCB தரப்பில் கூறப்பட்டதாம். ஆர்யான், பாலிவுட் நடிகை ஒருவருடன் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக வாட்ஸ்ஆப் சேட் செய்தாராம். அது மட்டுமல்ல. ஏற்கனவே கூறியபடி, ஆர்யான் போதைப் பொருள் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். இதனால் போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து இளைய சமூகத்தை காப்பாற்ற ஆர்யானுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்களாம்.

தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் பாலிவுட் நடிகை ஒருவர் முக்கிய அங்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நடிகை யார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. நடிகை ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் ஆர்யானுக்கு தொடர்ந்து ஜாமின் மறுக்கப்படுவதால் அவரை எப்படி வெளியே கொண்டு வருவது என தெரியாமல் ஷாருக்கான் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். நீண்ட ஆலோசனைக்கு பிறகு புதிய கோரிக்கை ஒன்றை முன்வைக்க ஷாருக்கான் குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்களாம்.

ஆர்யானுக்கு தொடர்ந்து காவல் நீட்டிக்கப்படுவதால், அடுத்த முறை ஜாமின் கேட்பதற்கு பதிலாக அவரை வீட்டுக்காவலில் வையுங்கள் என கோரிக்கை வைக்க உள்ளனராம். வீட்டுக் காவலில் வைத்தால், மகன் தங்களுடன் வீட்டில் இருக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X