Arjun Kapoor: மலைக்கா அரோராவுடனான பிரேக் அப்.. திருமணம் குறித்து பேசிய அர்ஜூன் கபூர்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராமற்றும் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூரிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரேக் அப் ஆனது அவர்களின் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிங்கம் அகெய்ன் படத்தின் பிரமோஷனில் பங்கேற்ற அர்ஜுன் கபூர் தங்களது பிரேக்கப்பை உறுதி செய்து, தான் சிங்கிள்தான் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அவர் பாலிவுட்டில் நடிகை ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் ரிலீசாகவுள்ள மெரே ஹஸ்பண்ட் கி பீவி படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ள அர்ஜுன் கபூர் தன்னுடைய திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அர்ஜுன் கபூர்: பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகனும் பிரபல பாலிவுட் நடிகருமான அர்ஜுன் கபூர், கடந்த சில ஆண்டுகளாகவே பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவை டேட்டிங் செய்து வந்தார். இவர்கள் இருவரும் லிவிங் டு கெதரில் இருந்து வந்த நிலையில், இவர்கள் காதல் நிலைக்காது என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தன. திருமணமாகி அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்து கடந்த 2017ம் ஆண்டில் விவாகரத்து செய்திருந்தார். இவருக்கு 22 வயதில் அர்ஹான் கான் எனும் மகன் உள்ளார். தன்னுடைய மகனுடன்தான் வசித்து வருகிறார். இதனிடையே தன்னைவிட 12 வயது இளையவரான அர்ஜுன் கபூரை காதலித்து வந்தார்.
அர்ஜுன் கபூர் -மலைக்கா ஜோடி: தொடர்ந்து சமூக வலைதளங்களில் இவர்கள் தங்களது புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வந்தனர். நெருக்கமான புகைப்படங்களாக இவை காணப்பட்டன. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தன்னுடைய சிங்கம் அகெய்ன் படத்தின் நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுன் கபூர், தான் சிங்கிள் என வெளிப்படையாக குறிப்பிட்டார். இதுகுறித்து மலைக்கா அரோரா கூறுகையில் தான் தன்னுடைய சொந்த விவரங்களை பொதுவெளியில் பேசுவதில்லை என்று கூறினார். ஆனால் தன்னுடைய பதிவு ஒன்றில் டாக்சிக் மனிதர்களுடன் பழகக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அவர் அர்ஜுன் கபூரைதான் கூறுகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
அர்ஜுன் கபூர் திருமணம்: இதனிடையே மலைக்காவை பிரிந்த அர்ஜுன் கபூர் விரைவில் நடிகை ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவ்லகள் தெரிவிக்கின்றன. இதனை தற்போது உறுதிப்படுத்தும்வகையீல் அர்ஜுன் கபூர் பேசியுள்ளார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள மெரே ஹஸ்பண்ட் கி பீவி படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்ட நிலையில், தன்னுடைய திருமணம் நடக்கும்போது அதுகுறித்து கண்டிப்பாக ரசிகர்களிடம் தெரிவிப்பேன் என்றும் தற்போது தன்னுடைய படம் குறித்து பேசலாம் என்றும் நேரம் வரும்போது என்னுடைய வருங்கால மனைவி குறித்து பேசலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அர்ஜுன் கபூர் அடுத்தப்படம்: தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து அதிகமான விமர்சனங்களை தான் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சிங்கம் அகெய்ன் படத்தில் அர்ஜுன் கபூரின் கேரக்டர் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக மெரே ஹஸ்பண்ட் கி பீவி படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் அர்ஜுன் கபூருடன் பூமி பெத்னேக்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். முதாசர் ஆசிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இநத்ப்படம் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications