Aishwarya Rai -டைவர்ஸ்னு ஒருபக்கம் புகையுது..ஆனா ஐஸ்வர்யா ராய் செம ஹேப்பியா இருக்காங்களே ட்ரெண்டிங் வீடியோ

மும்பை: Aishwarya Rai (ஐஸ்வர்யா ராய்) அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் பிரிந்துவிட்டார் என்று தகவல் வெளியான சூழலில் இருவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராய் கடந்த 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். அதற்கு பிறகு இருவர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர் பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அறிமுகம் தமிழில் ஆனாலும் தனது கவனத்தை பாலிவுட் பக்கமே அதிகளவு செலுத்தினார். இதன் காரணமாக அவருக்கு அங்கு வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருந்தன.

பிஸி ஹீரோயின்: கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது நடிப்பு திறமையை காண்பித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். சல்மான் கான், அமீர் கான், ஷாருக்கான் என பல முன்னணி ஹீரோக்களுடன் வரிசையாக ஜோடி போட்டு நடித்தார். இதனால் ஐஸ்வர்யா ராய் இல்லாத ஹிந்தி சினிமா இல்லை என்ற நிலையும் இருந்தது.

Aishwarya Rai and Abhishek Bachchans video is trending amid reports that they get divorced

தமிழில் ஐஸ்வர்யா ராய்: ஒருபக்கம் பாலிவுட்டில் பிஸியாக வலம் வந்துகொண்டிருந்த தமிழில் செலக்டிவ்வான படங்களிலேயே நடித்தார். ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என நடித்த அவர் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். நந்தினி கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அவர் அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து மிகச்சிறப்பாக நடித்திருந்தார்.

திருமணம்: இதற்கிடையே சல்மான் கானை காதலித்து வந்த அவர் சில காரணங்களால் அவரை பிரிந்து அபிஷேக் பச்சனை காதலிக்க தொடங்கினார். இருவருக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இந்த சூழலில் இருவரும் பிரியவிருப்பதாக பாலிவுட்டில் தகவல்கள் பரவ ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக அபிஷேக் பச்சன் கையில் ஐஸ்வர்யா ராய் அணிவித்த மோதிரம் இல்லை. எனவே அவர்கள் பிரிவது கன்ஃபார்ம் என கூறினர்.

வீட்டிலிருந்து வெளியே ஐஸ்வர்யா ராய்?: அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராய் தனது சமூக வலைதள பக்கங்களில் அமிதாப் பச்சனை அன்ஃபாலோ செய்துவிட்டார் என்றும்; அவர்களது வீட்டிலிருந்து ஐஸ்வர்யா வெளியேறி தனது தாயின் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் நேற்றிலிருந்து பாலிவுட்டில் ஒரு தகவல் பரபரக்கிறது. இதனால் நடப்பது என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

புதிய வீடியோ: இந்நிலையில் அந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோர் தங்களது மகள் ஆராத்யா படிக்கும் பள்ளி ஆண்டுவிழாவில் ஜோடியாக கலந்துகொண்டு அருகருகே அமர்ந்து தனது மகள் நடனம் ஆடுவதை ரசிப்பது போன்ற வீடியோவும் புகைப்படமும் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராய்க்கு டைவர்ஸ்லாம் இல்லை என்பதை இந்த வீடியோவும் புகைப்படமும் உணர்த்துவதாக மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X