மீண்டும் இணையும் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்?.. ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி
மும்பை: நடிகர் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த பல வருடங்களாக சுமூகமாக போய்க்கொண்டிருக்கும் அவர்களது திருமண வாழ்க்கையில் கடந்த சில காலமாக புயல் அடித்துக்கொண்டிருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்தச் சூழலில் அவர் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் கோலிவுட்டின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதற்கு பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்திய அவர்; அங்கு டாப் ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். முன்னணி ஹீரோக்களுடன் வரிசையாக ஜோடி போட்டு நடித்த அவர் சல்மான் கானோடு காதலில் இருந்தார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள்வரை பயணித்த அவர்களது காதல் கதை; ஒருகட்டத்தில் முடிவுக்கு வந்தது. அதற்கு காரணம் சல்மான் கானே என்று பலரும் கூறுவார்கள்.

அபிஷேக்குடன் திருமணம்: சல்மான் கானுடனான காதல் முறிவுக்கு பிறகு சிங்கிளாக இருந்த ஐஸ்வர்யா ராய்; அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுடன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தபோது அவரை காதலித்தார். இருவரது காதலுக்கும் வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த 2007ஆம் ஆண்டு இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். திருமண வாழ்க்கையை சுமூகமாக ஓட்டிக்கொண்டிருந்த சூழலில்; கடந்த சில மாதங்களாக ஒரு தகவல் பரவிவருகிறது.
என்ன தகவல்: அதாவது ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு உச்சத்தில் சென்றுகொண்டிருக்கிறது. விரைவில் அவர்கள் இரண்டு பேரும் பிரியவிருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. மேலும் இந்தப் பிரச்னைக்கு காரணமே அபிஷேக்கின் தாயான ஜெயாதான்; அவர்தான் ஐஸ்வர்யா ராயை ரொம்பவே அதிகாரம் செய்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதனை ஜெயா பச்சன் திட்டவட்டமாக மறுத்தார். மேலும் ஐஸ்வர்யா ஒன்றும் எனது மகள் அல்ல அவர் மீது அதிகாரம் காட்டுவதற்கு என்றார்.
அபிஷேக்கும் மறுப்பு: அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அபிஷேக் பச்சனும் இந்த விஷயத்தை மறுத்தார். மேலும் திருமணத்தின்போது அணிந்திருந்த மோதிரம் ஐஸ்வர்யா ராயின் கையில் இல்லாததை வைத்து ஏகப்பட்ட கதைகள் கட்டப்பட்டன. ஆனால் அந்தக் கதைகள் வெளியான கொஞ்ச நாட்களிலேயே அந்த மோதிரத்தை மீண்டும் அணிந்திருந்தார் ஐஸ்வர்யா. இதன் காரணமாக அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்பது உறுதியானது.
மீண்டும் இணையும் ஜோடி: ஆனால் மீண்டும் கடந்த சில நாட்களாக இரண்டு பேருக்கும் பிரச்னை என்றும்; விரைவில் அவர்களது விவாகரத்து விவகாரம் வெளியாகும் என்றும் பேசப்படுகிறது. இந்நிலையில் இரண்டு பேர் பற்றியும் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தக் லைஃப் படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் ஒரு காதல் கதையை ஹிந்தி, தமிழில் இயக்கப்போவதாகவும்; அதில் ஜோடியாக அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் நடிக்கவிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இரண்டு பேரும் சேர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் குரு, ராவணன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து சர்ச்சை வெடித்துவரும் சூழலில் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பேரும் மீண்டும் இணையவிருக்கிறார்கள் என்று வெளியாகியிருக்கும் தகவல் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையட்டும் என்று இரண்டு பேரின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











