அச்சச்சோ.. ஐஸ்வர்யா ராய் கைக்கு என்ன ஆச்சு?.. மகளுடன் அவசர அவசரமாக எங்கே போறாருன்னு பாருங்க!
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையான முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் மும்பை விமான நிலையத்தில் இருந்து கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
நடிகை ஐஸ்வர்யா ராயின் கையில் அடிபட்டு கட்டுப் போட்டிருக்கும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என சோஷியல் மீடியாவில் பதறிப்போய் உள்ளனர்.

#AishwaryaRaiBachchan என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ஐஸ்வர்யா ராய் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
கேன்ஸ் திரைப்பட விழா: கடந்த மே 14-ஆம் தேதி 77-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் தொடங்கப்பட்ட நிலையில், பல்வேறு இந்திய பிரபலங்கள் இந்த ஆண்டு அந்த விழாவுக்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில், பாலிவுட் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை பலர் அந்த விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
20 வருடத்துக்கு மேல்: நடிகை ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்பெட் அலங்கரிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க தனது மகள் ஆராத்யாவுடன் புறப்பட்டு சென்றுள்ளார்.
கைக்கு என்ன ஆச்சு?: நேற்று இரவு மும்பை விமான நிலையத்துக்கு வந்த ஐஸ்வர்யா ராய் காரில் இருந்து தனது மகளுடன் இறங்கிய நிலையில் சட்டென விமான நிலையத்திற்குள் நுழைந்தார். அப்போது அவரது கையில் கட்டுப்போட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள், ஐஸ்வர்யா ராய் கைக்கு என்ன ஆச்சு என பதறிப்போய் சோஷியல் மீடியாவில் #AishwaryaRaiBachchan ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கெட் வெல் சூன் ஐஸ்வர்யா என பதிவிட்டு வருகின்றனர். ஐஸ்வர்யா ராய்க்கு லேசாக காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஒவ்வொரு வருடமும் மிஸ் பண்ணாமல் ஐஸ்வர்யா ராய் சென்று விடும் நிலையில், அடிபட்டு இருந்தாலும் இந்த ஆண்டு அதை மிஸ் செய்யக் கூடாது என கிளம்பியிருக்கிறார். விரைவில் அட்டகாசமான ஆடைகளில் கேன்ஸ் விழாவை ஐஸ்வர்யா ராய் அலங்கரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபிஷேக் பச்சன் வரல: ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக விமான நிலையத்திற்கு வந்து பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரத்துக்கு பறந்து சென்ற காட்சிகள் இடம்பெற்ற நிலையில், செண்ட் ஆஃப் செய்யக் கூட அபிஷேக் பச்சன் வரலையே ஏன் என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பிரியப் போவதாக வதந்திகள் பரவிய நிலையில், சமீபத்தில் பிறந்தநாள் விழாவில் ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஐஸ்வர்யா ராய் அம்மா வீட்டுக்கு போய் விட்டார் என்கிற வதந்திகளுக்கும் அவர் சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











