பொன்னியின் செல்வன் நடிகை ஐஸ்வர்யா ராய் கையில் காஸ்ட்லி வாட்ச்; அதன் விலை என்ன தெரியுமா?
மும்பை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் மந்தாகினியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், ரக்ஷா பந்தனை முன்னிட்டு கோட் சூட் அணிந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து ரசிகர்களுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
அந்த புகைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா கையில் கட்டியிருக்கும் அந்த காஸ்ட்லி வாட்ச் தான் ரசிகர்களின் பார்வையை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அன்பே அன்பே கொல்லாதே
இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், எந்திரன், ராவணன் என எப்போது தமிழ் சினிமாவில் பார்த்தாலும் அதே அழகில் வசீகரித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய். மீண்டும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்து மிரட்ட காத்திருக்கிறார்.

குவாலியரில் ஷூட்டிங்
பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய காவிய புனைவு கதையான பொன்னியின் செல்வன் கதையை எம்.ஜி.ஆர் முதல் பல பிரபலங்களும் படமாக்க நினைத்தனர். ஆனால், கடைசியாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அந்த படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அதன் படப்பிடிப்பு குவாலியரில் தற்போது நடைபெற்று வருகிறது.

ஐஸ்வர்யா ராய் போர்ஷன்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக குவாலியருக்கு கிளம்பிய நடிகை ஐஸ்வர்யா ராயை கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா வழியனுப்பிய புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி டிரெண்டாகின. இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ரக்ஷா பந்தன் வாழ்த்து
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் தனது ரசிகர்களுக்காக ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை மறக்காமல் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படத்தை வெளியிட்டு கூறியுள்ளார். கோட் சூட் அணிந்து செம ஸ்டைலாக இருக்கும் ஐஸ்வர்யா ராயை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

காஸ்ட்லி வாட்ச்
நடிகை ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட இரு புகைப்படங்களிலும் தனது கையில் கட்டியிருக்கும் காஸ்ட்லி வாட்ச் நன்றாக தெரியும் படி போஸ் கொடுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் அந்த வாட்ச் குறித்து கூகுளில் தேட ஆரம்பித்துள்ளனர். கையில் வாட்ச் சூப்பரா இருக்கு மேடம் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

என்ன பிராண்ட்
Longines எனும் வாட்ச் பிராண்டுக்கு நீண்ட காலமாகவே நடிகை ஐஸ்வர்யா ராய் தூதுவராக உள்ள நிலையில், ரக்ஷா பந்தனை முன்னிட்டு கையில் அந்த பிராண்ட் வாட்சின் புதிய எடிஷனை அணிந்து கொண்டு நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த போஸை கொடுத்திருக்கிறார். #Longines, #HydroConquest என அந்த வாட்ச் தொடர்பான ஹாஷ்டேக்குகளையும் மறக்காமல் பதிவிட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

என்ன விலை
சன் ஷைன் ரே நிறத்தில் உள்ள அந்த கை கடிகாரத்தின் விலை ஒரு லட்சத்து முப்பத்தி நாலாயிரத்து ஐநூறு ரூபாயாம் (ரூ.1,34,500). ரக்ஷா பந்தனுக்கு கையில் ராக்கி மட்டும் தான் கட்டி விட வேண்டும் என்று அல்ல இது போன்ற காஸ்ட்லி வாட்ச்சையும் வாங்கி கட்டி விடலாம் என பலே ஐடியா கொடுத்து உள்ளார் ஐஸ்வர்யா ராய். இப்படியொரு வாட்ச்சை பெண்கள் கட்டிவிட வந்தால் நிச்சயம் ஆண்கள் ஓடிப் போக மாட்டார்கள்!


Click it and Unblock the Notifications











