இனிமே அந்த பேச்சுக்கே இடமில்லை.. கேன்ஸ் திரைப்பட விழாவில் தக் லைஃப் காட்டிய ஐஸ்வர்யா ராய்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சனை பிரிந்து விட்டார் என தொடர்ந்து ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பிக்கொண்டே இருந்த நிலையில், தொடர்ச்சியாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது டீம் தொடர்ந்து ஷேர் செய்து வந்தது. இந்நிலையில், சர்வதேச அளவில் இந்த பஞ்சாயத்துக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க நினைத்தே நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் அப்படி பங்கேற்றார் என பாலிவுட்டில் பரவலான பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.
பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அந்த நட்சத்திர தம்பதியினருக்கு ஆரத்யா எனும் அழகான மகளும் உள்ளார். திருமணமாகி பல வருடங்களாக சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தாலும், பாலிவுட்டில் அடிக்கடி ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை பிரிந்து விட்டார் என்றும் விவாகரத்து வதந்திகளை அதிகம் பரப்பியும் வருகின்றனர்.

இந்நிலையில், அனைத்துக்கும் முடிவு கட்டும் விதமாக ஐஸ்வர்யா ராய் இந்த ஆண்டு நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் செம அழகாக கலந்துக் கொண்டு பலருக்கும் தெள்ளத் தெளிவாக புரிய வைத்திருக்கிறார்.
கேன்ஸ் குயின் ஐஸ்வர்யா ராய்: ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரத்தில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. 2025ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மே 13ம் தேதி தொடங்கியது. மே 24ம் தேதியான நாளையுடன் நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டு ஜான்வி கபூர் முதன்முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கலக்கி வருகிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாக நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் குயினாகவே ஆண்டுதோறும் இந்தியா சார்பில் அங்கே கலந்துக் கொண்டு ரெட் கார்ப்பெட்டில் ராஜநடை போட்டு வருகிறார். இந்த ஆண்டும் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு கேன்ஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
நெற்றி வகிடில் குங்குமம்: ஆபரேஷன் சிந்தூரை பாகிஸ்தானில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய நிலையில், குங்குமம் அணிந்துக் கொண்டு ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் பட விழாவில் கலந்துக் கொண்டது தேசத்துக்கு பெருமையாக பார்க்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து கொண்டிருந்த விவாகரத்து சர்ச்சைகளுக்கும் சேர்த்தே சர்வதேச அளவில் முற்றுப்புள்ளியை வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய் என்கின்றனர்.
பொன்னியின் செல்வன்: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது. முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணி கதாபாத்திரங்களில் நடித்து பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களின் அன்பை அளவில்லாமல் பெற்றிருந்தார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் நடிக்க ஆரம்பித்து பொன்னியின் செல்வன் 2வது பாகம் வரை நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என பாலிவுட் ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஐஸ்வர்யா ராயை போல மேலும், சில நடிகைகளும் இந்திய பெருமையை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளிப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











