ஆரோக்கிய சேது உங்களின் பாதுகாவலன்... இரட்டை வேடத்தில் அஜய் தேவ்கன் விழிப்புணர்வு!
சென்னை: நடிகர் அஜய் தேவ்கன், அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருக்கும் ஆரோக்கிய சேது மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும்படி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
தற்போது இந்திய அரசு ஆரோக்கிய சேது என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த செயலியை மக்கள் கட்டாயம் பதிவிறக்கம் செய்து தங்களின் மொபைல் போன்களில் வைக்குமாறு அரசு கேட்டு கொண்டுள்ளது. இதே போல் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் இந்த செயலியில் இருக்கும் சிறப்பம்சங்களை சொல்லும் வகையிலும் ஒரு காணொளியை பதிவிட்டிருக்கிறார் நடிகர் அஜய் தேவ்கன்.

இந்த செயலியை நாம் பதிவிறக்கியதில் இருந்து நம்மை இந்த செயலி கண்காணித்து கொண்டே இருக்கும் நமக்கு ஏதும் காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் இந்த செயலியில் நாம் தெரிவிக்கலாம். இந்த செய்தியை இந்த செயலியே அரசிடம் கொண்டு போய் சேர்க்கும் .மேலும் நமது அருகே ஏதேனும் கொரோனா தொற்று உள்ளவர்கள் இருக்கிறார்களா என்பதையும் தெரிவித்து விடும் இதனால் நாம் சற்று எச்சரிக்கையாக இருக்கலாம்.

இந்த செயலியின் சிறப்பை தனது ஸ்டைலில் ஒரு காணொளியாக பதிவேற்றியுள்ளார் அஜய் தேவ்கன். இந்த காணொளியின் ஆரம்பத்தில் அஜய் தேவ்கன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார் அங்கு மற்றொரு அஜய் தேவ்கன் வந்து நான் உங்களின் புது பாதுகாவலன் என்றும் நான் தான் ஆரோக்கிய சேது என்று தனது சிறப்புகளை சொல்வார். ஒரு அஜய் தேவகன் பல சந்தேகங்களை கேட்க பாதுகாவலன் என்று அறிமுகமாகிய மற்றொரு அஜய் தேவகன் அனைத்தையும் எடுத்துரைப்பார். இப்படி இரு அஜய் தேவகன் உரையாடல்கள் மூலம் இந்த செயலியின் சிறப்பை மக்களுக்கு சொல்லியிருப்பார் அஜய் தேவகன்.

மத்திய அரசும் மாநில அரசும் இந்த மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வருகின்றனர். காரணம் கொரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவில் மட்டும் 20ஆயிரத்தை தாண்டி இருக்கிறது இந்த நேரத்தில் மக்களை பாதுகாத்து வரும் போலீஸ், மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என்று பலரும் தொடர்ந்து இந்த கொடிய நோயால் பாதிக்கபட்டு வருகின்றனர் .

இதனால் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு உதவும் வகையில் இந்திய அரசால் உருவாக்க பட்டிருக்கும் செயலி தான் இந்த ஆரோக்கிய சேது என்று பலரும் இதை பதிவிறக்கம் செய்து வைக்க சொல்கின்றனர்.
நடிகர் அஜய் தேவ்கன் இது போன்ற பல சமூக விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் இந்த நேரம் ஏற்படுத்தியிருக்கும் சூழ்நிலை வேறு மாதிரியானது இந்த விழிப்புணர்வு காணொளியை தானே எடுத்து நடித்திருக்கிறார் நடிகர் அஜய் தேவ்கன். இந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு செயலியின் பதிவிறக்க லிங்கையும் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











